திங்கள், 29 ஆகஸ்ட், 2011

Velanai Beach சாட்டி கடற்கரை நவீன உல்லாச புரியாகிறது

சாட்டி கடற்கரை மேலும் அபிவிருத்தி செய்யப்படும்


வேலணை சாட்டி கடற்கரையை சுற்றுலாத் தலமாக மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்தறிந்து கொண்டனர்.
சாட்டிப் பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் அப்பகுதியை சுற்றுலாத் தலமாக பூரணமாக மாற்றி அமைப்பது தொடர்பாக ஆராய்ந்தனர்.
இதன் பிரகாரம் அங்குள்ள அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு காண்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக அங்கு உல்லாசப் பயணிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஆண்கள் பெண்களுக்கென பொதுவான மலசல கூடங்கள் அமைத்தல் குடிநீர்த் தாங்கிகளை அமைத்தல் மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக