வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் தென்மராட்சியின் சில ஆசிரியர்கள்


தென்மராட்சிப் பிரதேசத்தின் பிரபல பாடசாலைகளில் உள்ள சில ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சாவகச்சேரி பிரதேச செயலர் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஆகியோரினால் இந்த முறைப்பாடுகள் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தகைய ஆசிரியர்களை கைது செய்வதற்கு வேண்டிய சட்ட ஏற்பாடு களைக் கவனிக்குமாறு சாவகச்சேரி நீதி மன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா பொலி ஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.ஆசிரியர்களினால் சில பெண் பிள்ளைகள் இவ்வாறு பாதிப்புக்கு உள் ளாகி இருக்கின்றபோதும், அவர்களின் எதிர்கால நலன் கருதி அவற்றை வெளிக்கொணர பிள்ளைகளின் பெற்றோர் தயக்கம் காட்டு கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலியல் முறைகேடுகளுக்குச் சிறுவர்கள் உள்ளாக்கப்படுவது தொடர்பில் விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றபோதும், பாதிக்கப்பட்ட பெண்பிள்ளைகளின் பெற்றோர் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றும் அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். பெற்றோரின் இத்தகைய செயலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆசிரியர்கள் தொடர்ந்தும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவதால் பண்பாட்டுச் சீரழிவு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேசமயத்தில் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்ந்து பாடசாலைக்குச் செல்ல அஞ்சுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.இந்த விவகாரம் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் ஆசிரியர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸார், சட்ட உதவிக் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுக்களின் கவனத்துக்கு இந்த விவகாரங்களை உடனடியாகக் கொண்டு வந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக