வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

தொண்டர் நிறுவனங்கள், புலம்பெயர்ந்தோர் ஆலோசனைப் பிரிவை அமைக்கவேண்டும்: ரொஹான் குணரட்ன

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதற்கான எதிர் பிரச்சாரங்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான ஆலோசனைப் பிரிவொன்றையும் புலம்பெயர்ந்தோர் ஆலோசனைப் பிரிவொன்றையும் ஏற்படுத்த வேண்டும் என இலங்கை அரசாங்கத்துக்கு பயங்கரவாத விவகார நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன ஆலோசனை வழங்கியுள்ளார்.சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் சவால்கள் எனும் கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.'எமது தூதரகங்கள் மேலும் வினைத்திறனானதாக இருக்கவேண்டும். எல்.ரி.ரி.யினால் சர்வதேச ரீதியாக மேறகொள்ளப்படும் பொய்யான பிரசாரங்களை வெளிவிவகார அமைச்சினால் முறியடிக்க முடியவில்லை. எல்.ரி.ரி.ஈ. தலைமைத்துவம் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் சர்வதேச வலையமைப்புக்கு அரசாங்கத்தினால் தனியாக பதிலடிகொடுக்க முடியவில்லை' என அவர் கூறினார்.'எமது வெளிநாட்டு பங்காளர்களுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். எல்.ரி.ரி.ஈ. தற்போது ஓர் பிரசார அமைப்பாக மாறியுள்ளது. புலம்பெயர்ந்தோருடன் செயற்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ருத்ரகுமாரன் போன்ற நபர்கள், சர்வதேச தலைவர்களிடமும் வாக்குகளுக்குப் பேராசையுள்ள அரசியல்வாதிகளிடமும் பொய்யான தகவல்களை வழங்கி, பாரபட்சமான குற்றச்சாட்டுகளை தெரிவித்து எமது நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்' என அவர் கூறினார்.1995 ஆம் ஆண்டு 95 சதவீதமான ஆயுதங்கள் லெபனான் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாங்கப்பட்டன. 1997 இல் 95 சதவீதமான ஆயுதங்கள் வடகொரியாவிலிருந்து வாங்கப்பட்டன. எல்.ரி.ரி.ஈ.யின் முன்னணி ஆயுத முகவர்களை கைது செய்வதற்கு அமெரிக்கப் புலனாய்வுத்துறை எமக்கு மிக உதவியாக இருந்தது' எனவும் ரொஹான் குணரட்ன தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக