திங்கள், 1 ஆகஸ்ட், 2011

வேறு மார்க்கம், மாற்றீடும் இல்லை; மீண்டும் ரி.என் ஏயிடம் சரணடைந்த தமிழர்
க. சிவராசா
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடபகுதி மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தமது வாக்குகளை அளித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்கள் என்றே பல தமிழ் ஊடகங்களும் கருத்து வெளியிட்டுள்ளன. அதாவது தமக்கான அரசியல் தீர்வை விரைவாக அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்பதே அத்தகவல் என்பதாகவே பல தமிழ் ஊடகங்களும் தெரிவித்துள்ளன. இதற்கும் மேலாகச் சென்றுள்ள சில தமிழ் இணையத்தளங்கள் அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர் என்றும் தமது ஒற்றுமையை உலகறியச் செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளன. உண்மையில் இந்தத் தமிழ் ஊடகங்களோ அல்லது தமிழ் இணை யத்தளங்கோ தெரிவித்துள்ள இக் கருத்துக்களில் எவ்விதமான உண்மையும் கிடையாது. தமிழ் மக்கள் தமக்கு ஓர் அரசியல் தீர்வு வேண்டும் எனும் விடயத்தில் உறுதியாகவே இருந்து வருகின்றனர். விடுதலைப்புலிகள் இருந்தபோது அத்தீர்வு புலிகளின் இராணுவ ரீதியிலான பலத்தால் தமக்குக் கிடைக்குமென தமிழரின் ஒரு சிறுதரப்பு நம்பியிருந்தது. ஆனால் உலக நாடுகள் பலவற்றாலும் இராணுவ பலம் கொண்ட அமைப்பு எனப் புகழப்பட்ட புலிகள் இயக்கம், இலங்கை இராணுவத்தினால் அழிக்கப்பட்டதும் வேறு வழியில்லாத நிலையில் அச்சிறு குழுவினர் புலிகளுடன் ஒன்றி ணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளனர். (மேலும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக