திங்கள், 1 ஆகஸ்ட், 2011

சிவாஜிலிங்க:வல்வெட்டித்துறை ந.ச. தலைவர் பதவியை ஏற்பதில் சிக்கல் இருக்காது


வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவர் பதவியை தான் பொறுப்பேற்பதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாதென தான் நம்புவதாக சிவாஜி லிங்கம் தெரிவித்தார். “ஊடகங்களில் தெரிவிப்பது போல் தமிழ் தேசியக் கூட்ட மைப்பினருக்கும் எனக்கும் எவ்வித முறுகல் நிலையும் இல்லை. அது முற்றிலும் தவறான கருத்து” எனவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

“பதவியேற்பு தொடர்பாக என் னுடைய தனிப் பட்ட சில பிரச்சினைகளை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலுள்ளவர்களுக்கு விளக்கி கூறியுள்ளேன். அதனை அவர்கள் தீர்த்து வைப்பார்க ளென்பதில் நான் உறுதியாக விருக்கும் அதேசமயம், கூட்டமைப்பினர் குறிக்கும் தினங்களில் சுமுகமான முறையில் பதவி யேற்பு நடைபெறும்” எனவும் சிவாஜி லிங்கம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வல் வெட்டித்துறை நகர சபையில் போட்டியிட்ட என். ஆனந்தராஜா என்பவரே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட வரையே நகரசபையின் தலைவராக நியமிக்கப்பட வேண்டுமென்ற நியதியின்படி என். ஆனந்தராஜா என்பவரே வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டும்.

இது இப்படியிருக்க வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் பதவி தனக்கு கிடைக்க வேண்டுமெனக் கோரி சிவாஜி லிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு பிரத்தியேக தொலைநகலொன்றை அனுப்பி வைத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தல் 2011 எனத் தலைப்பிட்டு வல்வெட்டித்துறை நலன்விரும்பிகள் என சிவாஜிலிங்கத்தின் தலைமையில் 11 பேர் ஒப்பமிட்டு இந்த தொலை நகலை கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக சிவாஜிலிங்கத்திடம் கேள்வியெழுப்பிய போதே தனக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையே எவ்வித முறுகல் நிலையும் இல்லையெனக் கூறிய அவர், தான் எதிர்பார்த்திருப்பதன்படி இன்னும் ஓரிரு தினங்களில் சுமுகமான முறையில் பதவியேற்பு நடைபெறுமெனவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக