திங்கள், 1 ஆகஸ்ட், 2011

தேசிய தாய்ப் பாலூட்டல் வாரம் இன்று முதலாம் திகதி ஆரம்பமாகின்றது.

தாய்ப் பாலூட்டல் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஒரு மாதத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தாமல் இம்மாதம் முழுவதும் அதனை செயற்படுத்துமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய தாய்ப் பாலூட்டல் வாரத்தின் நிமித்தம் விசேட சுற்றறிக்கையொன்றை சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இச்சுற்றறிக்கை மாகாண சுகாதாரப் பணிப்பாளர்களுக்கும், மருத்துவ அலுவலக அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தாய்ப் பாலூட்டல் குறித்து அதிகம் பேசுவோம் என்ற தொனிப் பொருளைக் கொண்ட இவ்வருட தேசிய தாய்ப் பாலூட்டல் வாரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் இச்சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தென்னாசிய நாடுகளில் குழந்தைகள் பிறந்த முதல் மணித்தியாலத்திற்குள் 85 சதவீதம் தாய்ப்பால் ஊட்டப்படும் நாடாக இலங்கை விளங்குவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக