செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

தப்பிக்க மார்ட்டின் எவ்வளவோ முயன்றும் பலன் இல்லாமல் போனது. ஆறுதல் சொல்லக் கூட

பணம் பாதாளம் வரை பாயும்...’’

இந்த தாரக மந்திரத்தை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு லாட்டரி தொழில் மூலம் பல மாநிலங்களை பாக்கெட்டில் வைத்திருந்தவர் மார்ட்டின். எங்கெல்லாமோ பாய்ந்த அவரது பணத்தால், இம்முறை அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
ஆம்! லாட்டரி அதிபர் மார்ட்டினை கைது செய்வார்களா? மாட்டார்களா..? என்று பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்க... கடந்த சனியன்று அதிரடியாக கைது செய்தி ருக்கிறார்கள் சேலம் போலீஸார். தற்போது சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் மார்ட்டின்.
சேலத்தைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், சென்னை என்று மார்ட்டின் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிந்துகொண்டிருக்க... அந்த வழக்குகளிலும் மார்ட்டின் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் செல்வாக்கு மிக்கவராக இருந்த மார்ட்டின், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தலைமறைவாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் மீது அடுக்க டுக்காக புகார்கள் வர... சில வழக்குகளில் முன்ஜாமீன் பெற்றிருந்தார். கடைசியாக சேலம் நில அபகரிப்புப் புகாரில் கைது செய்யப்பட... அதிர்ந்தே போய்விட்டார் மார்ட்டின்.
இந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்ப மார்ட்டின் பல வழிகளிலும் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அ.தி.மு.க. தலைமையிடம் இருந்து வந்த அதிரடி உத் தரவால், மார்ட்டினின் முயற்சிகள் அனைத்தும் தவிடுபொடியாகி இருக்கிறது.

சில நாட்களுக்கு முன் முக்கிய வி.ஐ.பி.யைச் சந்தித்து 25 கோடி ரூபாய் வரை கொடுக்கத் தயாராக இருந்தாராம். தன்னை அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்றும், குறிப்பாக கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் கெஞ்சியிருக்கிறார் மார்ட்டின்.
ஆனால் அந்த வி.ஐ.பி., ‘‘உங்கள் மீது தலைமை மிகுந்த கோபத்தில் இருக்கிறது. நீங்கள் எதற்காக முந்தைய ஆட்சியில் அவ்வளவு நெருக்கம் பாராட்டினீர்கள். அவர் கதை வசனத்தில் திரைப்படம் எடுத்ததெல்லாம் உங்களுக்கே ‘ஓவராக’ தெரியவில்லையா?

உங்கள் விவகாரத்தை யார் சென்று கார்டனில் பேசினாலும், பேசுபவர்களுக்கும் ஆபத்துதான். ஆறுமாத காலம் நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். அதற்குப் பிறகு தான் ஏதாவது செய்யமுடியும்’’ என்று கூலாக சொல்லி அனுப்பிவிட்டாராம்.
அவர் கைவிரித்துவிட... அடுத்த புள்ளியைத் தேட ஆரம்பித்தார் மார்ட்டின். கோவை மணல் மன்னன்தான் இதற்கு சரியான ஆள் என்று அவருக்கு சிலர் ஆலோசனை கூற... அடுத்த முயற்சியை ஆரம்பித்தார் மார்ட்டின்.

ஆனால், மணல் மன்னனோ, புகலிடம் கேட்டு வந்தவரிடம் புலம்பித் தீர்த்திருக்கிறார்.
“தி.மு.க.வின் அனுதாபியாக இருந்தவன் நான். பொங்கலூராருடன் நான் எவ்வளவு நெருக்கமாக இருந்தேன் தெரியுமா? கடந்த 1996-ல் எனக்கு மேயர் பதவி கொடுக்க அந்தக் கட்சியினர் தயாராக இருந்தனர். அந்தக் கட்சியின் தலைமை என்னிடம் இருந்த பணத்தை விரும்பியதே தவிர, என்னை விரும்பவில்லை.

இதனைப் புரிந்துகொண்ட நான், எந்தக் கட்சியுடனும் ஒட்டாமல் சற்று விலகியே இருந்தேன். ‘டொனேஷன்’ என்று வரும்போது கட்சிப் பாகுபாடு பார்க்காமல் சரிசமமாகவே கொடுத்து வந்தேன். அப்படியிருந்தும் போன ஆட்சியில் என்னிடமிருந்து மணல் காண்ட்ராக்ட்டை பிடுங்கிவிட்டார்கள்.

அந்த காண்ட்ராக்ட்டை தன் கட்சிக்காரர்களுக்கே பங்கு போட்டுக் கொடுத்தார்கள். அதற்குப்பிறகும், தொடர்ந்து என் தொழிலுக்கு பாதகமான விஷயங்களே நடந்தன. தொழில் செய்றவங்க அரசியல்வாதிங்ககிட்டே கொஞ்சம் தள்ளியேதான் இருக்கணும். நெருங்கிட்டோமுன்னா நமக்குதான் ஆபத்து.

முந்தைய ஆட்சியாளர்களிடம் நீங்க இவ்வளவு வெளிப்படையா நெருங்கியிருக்கக் கூடாது. அதே சமயம் மற்ற கட்சிகளின் விரோதத்தையும் சம்பாதித்திருக்கக் கூடாது. போன தேர்தல்ல ஒரு தொகையை உங்ககிட்ட வாங்க ஒரு கட்சி முயற்சி செய்திருக்கு. நீங்க ஊர்லேயே இல்லேன்னுட்டாங்க. விசாரிச்சதுல நீங்க உள்ளூர்ல இருந்துட்டே இல்லேன்னு சொன்னது அவங்களுக்குத் தெரிந்து டென்ஷன் ஆகியிருக்காங்க.

இப்படியா அரசியல் தலைகளை பகைச்சுக்கிறது? அதுதான் இப்ப உங்களுக்கு சிக்கலாகி இருக்கு. நான் இப்பத்தான் நிம்மதியா தொழில் நடத்திக்கிட்டு இருக்கேன். இந்த நேரத்துல உங்களுக்காக போய் பேசினா, உள்ளதும் போய்டும். கொஞ்சம் பொறுங்க... பார்க்கலாம்’’ என்று மார்ட்டினுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்திருக்கிறார் கோவை மணல் மன்னன்.

இதன்பிறகு, முக்கிய பிரமுகர்கள் பலரையும் தொடர்பு கொண்டு கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மார்ட்டின் எவ்வளவோ முயன்றும் பலன் இல்லாமல் போனது. ஆறுதல் சொல்லக் கூட தி.மு.க. புள்ளிகள் யாரும் தயாராக இல்லை. மார்ட்டினுடன் பேசுவதைக்கூட அவர்களில் சிலர் தவிர்த்துவிட்டனர்.

சில வழக்குகளில் முன்ஜாமீன் பெற்றார் மார்ட்டின். ஆனால், சேலம் நில அபகரிப்பு வழக்கில் சிக்கிவிட்டார். தன்னால் பலன் அடைந்த தி.மு.க.வினர் கண்டுகொள்ளாமல் கைவிட்டது மார்ட்டின் மனதை மிகவும் பாதித்திருக்கிறதாம்.

இதற்கிடையே, வீட்டுவசதி வாரிய மனைகளை மோசடி செய்து அபகரித்ததாக மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மீது கோவை போலீஸார் ஒரு புகாரை பதிவு செய்து ள்ளனர். இந்த வழக்கில் லீமா ரோஸைக் கைது செய்வதில் திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாம். விரைவில் அந்த முட்டுக்கட்டை நீங்கிவிடும் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக