செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

இடம் பெயர்ந்த அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம்-காரணம் என்ன

கரூர்: அதிமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த எம். ராமசந்திரன் திடீரென அவரது பொறுப்பிலிருந்து வேறு பொறுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வினரால் எம்.ஆர். என்று அழைக்கப்படும் எம். ராமச்சந்திரன் வேறு யாருமல்ல, முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கொழுந்தன் ஆவார். அதாவது சசிகலாவின் கணவர் எம்.நடராஜனின் தம்பிதான் இந்த ராமச்சந்திரன்.

இதில் எம். ராமசந்திரன், இராவணன், கலியபெருமாள், மிடாஸ் மோகன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்து சக்தி வாய்ந்தவர்கள் ஆவர்.

இந்த சக்தி வாய்ந்த குழுவில் இருந்தவரான ராமச்சந்திரனை தற்போது டீ எஸ்டேட் வேலைகளைப் பார்க்க அனுப்பி விட்டாராம் முதல்வர் ஜெயலலிதா. முன்பு, முன்பு, கட்சியினரின் கோரிக்கை மனுக்களை கட்சி அலுவலகத்திலிருந்து தினமும் போயஸ் கார்டனுக்கு எடுத்துச் செல்லும் பணியில் இருந்தார் எம். ராமசந்திரன்.
இவரைப் பார்த்து கட்சியின் 2ம் மட்டத் தலைவர்கள் ஒருவித அச்சத்திலேயே இருப்பார்களாம். இவரைப் பகைத்துக் கொண்டால் அம்மாவிடம் நமது கோரிக்கைகள் போய்ச் சேராது என்ற அச்சமே இதற்குக் காரணம்.

தற்போது ராமச்சந்திரன் திடீரென பொறுப்பு மாற்றம் கண்டிருப்பது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது பனிஷ்மென்ட்டா அல்லது பொறுப்பானவர் என்பதால் வேறு முக்கியப் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக