செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

ஐரோப்பா, அமெரிக்காவில் நானோ உற்பத்தி ஆலைகள்: ரத்தன் டாடா

டெல்லி: அடித்தட்டு மக்களின் கார் வாங்கும் கனவை நனவாக்கும் வகையில், உலகின் மிகக்குறைந்த விலை கொண்ட நானோ காரை தயாரித்து தனது கனவை நிறைவேற்றிய ரத்தன் டாடா அடுத்து, அயல்நாடுகளிலும் நானோ காரை உற்பத்தி செய்ய இருக்கும் திட்டத்தை முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார். இது அவரது இரண்டாவது கனவு என்று கூறினால் மிகையாகாது.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நானோ கார் உற்பத்தியை துவங்க திட்டமிட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் டாடா மோட்டார்ஸ் பங்குதாரர்களின் ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழைமை நடந்தது. இதில், கலந்து கொண்டு பேசிய டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா, நானோ கார் உற்பத்தியை மூன்று வெளிநாடுகளில் துவங்க திட்டமிட்டிருப்பதாக கூறினார்.

இதுகுறித்து அவர் கூட்டத்தில் பேசியதாவது:
"அடுத்த ஆண்டு துவக்கத்தில் மூன்று வெளிநாடுகளி்ல நானோ காரின் உற்பத்தியை துவங்க திட்டமிட்டுள்ளோம். நானோ காரை சர்வதேச சந்தையில் முக்கிய இடத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக இது இருக்கும்.

இதற்காக, இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அசெம்பிளிங் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த தொழிற்சாலைகளில் நானோ கார் மட்டுமின்றி ஏஸ் மினிடிரக் மற்றும் பிக்கப் டிரக்குகளையும் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக