திங்கள், 1 ஆகஸ்ட், 2011

பரமஹம்சர் என்பதை நீக்காவிட்டால் நித்தியானந்தா ஆசிரமத்தை முற்றுகையிடும் போராட்டம்

போலி சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் ராமேஸ்வரம் சரவணன் தலைமை தாங்கினார். மாநில அமைப்புக்குழு செயலாளர் கணபதி ரவி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ஞானசம்பந்தம், திராவிட பறையர் முன்னேற்றக் கழக தலைவர் ராஜசேகர், தமிழ் மாநில சிவசேனா கட்சித் தலைவர் திரவியப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம் பேசியதாவது: போலி சாமியார் நித்தியானந்தாவை உடனே கைது செய்ய வேண்டும். அவரை தமிழகத்துக்குள் வர விட மாட்டோம். அவருக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நித்தியானந்தா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மனைவியை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

ஆன்மிகத்தில் ஈடுபட போகிறேன்; குண்டலினி யோகம் மூலம் ஆகாயத்தில் பறக்க வைக்கப் போகிறேன் என்று கூறி, இந்து பெண்களை கேலி கூத்தாக்கியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. ஆன்மிக ஒளி ராமகிருஷ்ண பரமஹம்சர் பெயரில் இருப்பதைப்போல், தனது பெயருக்கு பின்னால் நித்தியானந்த பரமஹம்சர் என்று போட்டுள்ளதை நீக்க வேண்டும். இல்லையென்றால், அவரது ஆசிரமத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு ஞானசம்பந்தம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக