செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

நக்கீரன் கோபால் பேச்சு:மரண தண்டனையை தூக்கில் போட வேண்டும்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நிறைவேற்றவிருக்கும் தூக்கு‌த் தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌‌றிஞ‌ர்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகிய மூன்று பேர் சென்னை கோயம்பேடு பேரு‌ந்து நிலையம் அருகே இ‌ன்று 4வது நாளாக உண்ணாவிரதம் இரு‌ந்து வரு‌கி‌ன்றன‌ர்.


இவ‌ர்களு‌க்கு அ‌ர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌‌ள், நடிக‌ர்க‌ள், இய‌க்குந‌ர்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு தர‌ப்‌பி‌னர் ஆதரவு தெ‌ரி‌வி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.
இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். அதில் நக்கீரன் ஆசிரியர்,நக்கீரன்’ கோபால் பங்கேற்றார்.
 மூவரின் தூக்குத்தண்டனைக்கு எதிராகவும்,  உண்ணாவிரதம் இருக்கும் மூவருக்கு ஆதரவாகவும் நக்கீரன் கோபால் குரல் கொடுத்தார்.

அவர்,பொதுவாக நமக்கெல்லாம் இல்லாத தைரியம் இந்த மூன்று பேருக்கும் இருக்கிறது.; இதை நாம்
பாராட்டித்தான் ஆகவேண்டும்.   

யாராவது ஒரு கல்லெறியனுமே; அந்த கல்லு இந்த மூன்று பேரின் உருவமாக வந்திருக்கிறது.    இன்று 4வது
நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

தேகம் ஒல்லியாக இருப்பவர்களுக்கு உண்ணாநோன்பு இருப்பதில் கஷ்டம் இருக்காது.  ஆனால் உடம்பு குண்டாக
இருப்பவர்கள் உண்ணாநோன்பு இருப்பதில் மிகவும் கஷ்டப்படுவார்கள்.  அப்படி இருந்தும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். 


இது பெரிய விசயம். ஒரு விடியலை நோக்கி இந்த மூவரும் உண்ணாவிரதம் இருப்பதை
தமிழகமே இன்று கவனிக்கிறது.

தூக்கில் போட வேண்டும் .....மரண தண்டனையை தூக்கில் போட வேண்டும்.    இன்றைக்கு ஜனநாயம் பேசுகிறோம்.  காந்தியம் பேசுகிறோம்.; காந்திய முறையில்தான் நாம் சுதந்திரத்தை வாங்கியிருக்கோம் என்று
படிக்கிறோம்; சொல்கிறார்கள்.  காந்திய வழியில்தான் நம் நாடு நடக்கிறது என்கிறார்கள்.

ஆனால், அரசாங்கம் இன்று மூன்று பேரை  காட்டுமிராண்டித்தனமாக தூக்கில் போட்டுத்தான் ஆவேன் என்று
தேதியை குறித்திருக்கிறது.
நாம் காட்டுமிராண்டிகள்தான் என்று சொல்லாமல் சொல்கின்ற ஒரு நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கின்றோம். 
ஒரு அன்னா ஹசாரே என்கிற காந்தியவாதி உண்ணாவிரதம் இருக்கிறார்.  பாராளுமன்றத்தில் இந்த விவகாரத்தை விவாதிக்கிறார்கள்.    இந்த அளவிற்கு பாராளுமன்றம் இந்த விவகாரத்தை கையில் எடுத்ததற்கு காரணம்,  மீடியாதான்.  

மீடியாவின் முயற்சியால்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது.   இதனால்தான் மத்திய அரசே பயந்து
பாராளுமன்றத்தில் லோக்பால் நிறைவேற்றியிருக்கிறது.  இதே போல்,  இந்த மூன்று சகோதரிகளின் உண்ணாவிரதத்தை மீடியாக்கள் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.   பிரிவிணை பார்க்காமல் மீடியாக்கள் இந்த விசயத்தில் ஒன்றுபடவேண்டும். 

கால அவகாசம் குறைவாக இருப்பதால் இந்த நிமிடத்தில் இருந்து உறுதிமொழி எடுத்து மக்களிடையே கொண்டு
செல்ல வேண்டும் மீடியாக்கள்.   ஏன் என்றால் விட்டுவிட்டால் பிடிக்க முடியாது.

செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி இந்த விவகாரம் ஆகிவிடக்கூடாது.   அதனால் அன்னா ஹசாரே
மாதிரியான பொதுவான ஒரு நபரை வைத்து போராடவும் வேண்டும்.  

தூக்குதண்டனையை தடுப்பதற்கு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.  இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கிறது.  அதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனிதநேயமிக்க அனைவரையும் ஒன்றினைத்து பெரும் போராட்டமாக ஆரம்பித்து மக்கள் எழுச்சியை ஏற்படுத்த
வேண்டும்.   அப்படிப்பட்ட எழுச்சியால்தான் தூக்குத்தண்டனையை நிறுத்த முடியும்.  

மூன்று உயிர்களுக்காக நேற்று ஒரு உயிர் தீக்குளித்து இறந்தது.  இப்போது மூன்று உயிர்கள்
போராடிக்கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.   அதற்கு அனைத்து பத்திரிகை முதலாளிகளையும் சந்தித்து இந்த போராட்டத்தை மக்களிடையே பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று கெஞ்சிக்கேட்க வேண்டும்.   அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

நிச்சயமாக நக்கீரன் மற்றும் நக்கீரன் சார்ந்த ஊடகம் இந்த பிரச்சனையை மக்களிடம் தொடர்ந்து
எடுத்துச்செல்லும்.    மக்கள் எழுச்சி மூலமாக இந்த மூன்று பேரின் மரணதண்டனை நிச்சயமாக நிறுத்தப்படும்.

நான்காவது நாளாக இந்த பெண்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள்.   இந்த உண்ணாநோன்பு, வெற்றி பெற்ற
உண்ணா நோன்பாக முடியும் என்று நம்புகிறேன்’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக