செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

முன்னேஸ்வரம் மிருக பலிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

முன்னேஸ்வரம் மிருக பலிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் வரும் 13ம் திகதியன்று நடைபெறவுள்ள மிருக பலி பூஜைக்கு உடனடியாக தடை விதிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.

இந்த விடயம் தொடர்பான பிரதான மனு மீதான விசாரணையை ஒக்டோபர் 14ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

எம்பிலியபிட்டியவைச் சேர்ந்த பௌத்த பதனம என்ற அமைப்பு உட்பட 14 பெளத்த அமைப்புகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.
ஜாதிக்க ஹெல உறுமயவைச் சேர்ந்த அத்துரலியே ரத்தன தேரர், அரசிடமிருந்து தகுந்த அனுமதி பெறப்படாமல் செய்யப்படும் இந்த மிருக பலி மூலம் மற்ற மதத்தவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தடை விதிக்க மறுத்த நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் ரத்தன தேரர் கூறினார்.
ஒக்டோபர் 14ம் திகதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளை இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக