வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

500 படகுகள் இலங்கை மீனவர்களால் சுற்றிவளைப்பு ?ராமேஸ்வரம் மீனவர்களது

ராமேஸ்வரம் மீனவர்களது 500 படகுகள் இலங்கை மீனவர்களால் சுற்றிவளைப்பு ?

இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்காக கடலுக்கு சென்றிருந்த மீனவர் குழுவொன்றை நேற்றைய தினம் இலங்கை மீனவர்கள் குழுவொன்று விரட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராமேஸ்வரம் மீனவர்களது 500 படகுகள் இலங்கை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் அதன்போது இந்திய மீனவர்களின் வலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் மீன்பிடி திணைக்களத்துக்கோ பொலிசாருக்கோ ராமேஸ்வரம் மீனவர்களால் முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக