சனி, 23 ஜூலை, 2011

திரைக்கு வரும் நடிகைகளின் நிஜக் கதைகள்


நடிகைகளின் நிஜ வாழ்க்கையை படமாக எடுக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். என்ன விசேஷம் என்றால் கற்பனைக் கதைகளை விட இந்த நிஜக் கதைகளில் சோகம், அதிரடி, டிராஜெடி ஆகியவை எக்கச்சக்கமாக உள்ளன.
புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யாவின் கதை மலையாளத்தில் திரக்கதா என்ற பெயரில் படமானது. அதில் ஸ்ரீவித்யாவாக பிரியாமணி நடித்தார். இறுதிக்காலத்தில் புற்று நோய்க்குப் பலியானார் ஸ்ரீவித்யா. அவரது வாழ்க்கைத் துளிகளை சித்தரிப்பதாக அமைந்தது இந்தப் படம்.

அதேபோல செக்ஸ் பாம் என்ற சொல்லுக்கு புது இலக்கண் படைத்தவரான சில்க் ஸ்மிதாவின் கதையை இப்போது டர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் படமாக்கி வருகின்றனர். வித்யா பாலனை சில்க் வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

1980-களில் கவர்ச்சி நடிகை வேண்டுமா, கூப்பிடுங்க சில்க் ஸ்மிதாவை என்று சொல்லும் அளவிற்கு அவர் மகா பிரபலம். அவரை பலர் காதல் என்ற பெயரில் ஏமாற்றினர். ஒரு கட்டத்தில் விரக்தியை தாங்க முடியாமல் சில்க் தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதா என்றால் கவர்ச்சி என்று சொல்லும் ரசிகர்களுக்கு அவருடைய பரிதாபமான வாழ்க்கையை பற்றிக் காட்டத் தான் இந்த படம்.
இந்த வரிசையில் இன்னொரு நடிகையின் கதை படமாகப் போகிறது. அவர் சாரதா. அந்தக் காலத்து அழகு நடிகை, தேசிய விருது பெற்றவர். ஊர்வசி சாரதா என்றுதான் அவருக்குப் பெயர்.
மலையாளத்தில் படமாகிறது சாரதாவின் கதை. படத்திற்கு நயிகா என்று பெயரிட்டுள்ளனர். இது சாரதாவின் காதல் தோல்விகள் பற்றிய படமாம்.

இதேபோல சோனியா அகர்வாலின் கதையை ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற பெயரில் சோனியாவை வைத்தே தயாரிக்கின்றனர். சோனாவும் தனது சொந்தக் கதையை படமாக்கப் போவதாக கூறியுள்ளார்.
இன்னும் எந்தெந்த நடிகையின் கதையெல்லாம் படமாகப் போகிறதோ தெரியவில்லை.
அங்கே சுட்டு, இங்கே சுட்டு கடைசியில் சினிமா உலகதுக்குள்ளேயே கதை தேட ஆரம்பித்து விட்டனர் இயக்குநர்கள். இது கற்பனை வறட்சியைக் காட்டுகிறதா அல்லது கவர்ச்சியை வைத்து காசாக்கும் நோக்கைக் காட்டுகிறதா என்பது புரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக