சனி, 30 ஜூலை, 2011

நால்வருக்கு கனடாவில் பிணை,ஓசியன் லேடி கப்பலில் கடத்திச் சென்றதாக குற்றம்

72 இலங்கைத் தமிழர்களை ஓசியன் லேடி கப்பலில் கடத்திச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த 4 தமிழர்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் ரொக்கப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஸ் கொலம்பியா நீதிமன்றம் நேற்று இவர்களுக்குப் பிணை வழங்கியது.

39 வயதான கமல்ராஜ் கந்தசாமி, 33 வயதான விக்னராஜா தேவராஜா, ஆகியோர் 5000 டொலர் பிணையிலும், 33 வயதான பிரான்ஸிஸ் அந்தோனிமுத்து அல்போன்சு, 33 வயதான 2000 டொலர் பிணையிலும், 32 வயதான ஜெயசந்திரன் கனகராஜ் 100 டொலர் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன், டொரண்டோவில் குறித்த நால்வரும் தற்போது வசிக்கும் முகவரியிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையின் நியமங்களுக்கு ஏற்ப. கடவுச்சீட்டு, விசா மற்றும் பயண ஆவணங்களை பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக