சனி, 30 ஜூலை, 2011

நிரூபமா ராவிற்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் ஜனாதிபதி

மூன்றுநாள் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் நேற்றிரவு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் தனது வெளிவிவகார செயலர் பதவியிலிருந்து நாளையுடன் விடைபெறுகிறார். பிரியாவிடை அளிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் அழைப்பின் பேரில் நிரூபமா ராவ் இலங்கை வந்துள்ளார்.
இன்றுகாலை நிரூபமா ராவிற்கு காலை உணவுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 1973ம் ஆண்டு தொடக்கம் நிரூபமா ராவ் இலங்கையுடன் இணைந்து பல்வேறு விதத்தில் செயற்பட்டுள்ளார்.
நிரூபமா ராவ் அமெரிக்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக