வியாழன், 28 ஜூலை, 2011

நடிகர் அஜய் தற்கொலை



`அம்புலி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர், அஜய். இது, 3டி படம்.  படப்பிடிப்பு முடிவடைந்து, படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்நிலையில்  அஜய் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அஜய்யின் சொந்த ஊர், பெங்களூர். `அம்புலி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அவர் பெங்களூர் சென்று விட்டார். இந்த நிலையில், அஜய் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் திடீர் என்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. `அம்புலி' படத்தில் அஜய் ஜோடியாக நடித்திருப்பவர், சனம். இவரும் பெங்களூரை சேர்ந்தவர்தான்.

இதுவரை, அஜய் ஒருதலையாக காதலித்ததாகவும், அஜய்யின் காதலை சனம் ஏற்கவில்லை என்றும் பேசப்படுகிறது. இதனால் மனம் உடைந்து அஜய் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக