வியாழன், 28 ஜூலை, 2011

இசை அமைப்பாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் ராயல்டி தரவேண்டியதில்லை நீதிமன்றம்


இசையமைப்பாளர்களுக்கு ராயல்டி தரதேவையில்லை : மும்பை கோர்ட் தீர்ப்பு
சினிமாவில் பாடல் எழுதும் கவிஞர்களுக்கும், அவற்றுக்கு இசையமைக்கும இசை அமைப்பாளர்களுக்கும் படத் தயாரிப்பாளர்கள் சம்பளம் தருகிறார்கள்.
பின்னர், இந்த பாடல்கள் மற்றும் இசையின் உரிமையை படத் தயாரிப்பாளர் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்த பாடல்கள், இசையை ஒலிபரப்பும் தனியார் ரேடியோ சேனல்கள், அதற்கான உரிமத்தை பி.பி.எல். என்ற படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கட்டணம் செலுத்தி பெறுகின்றன.

இந்த பணம் சங்கத்தின் மூலமாக தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரம், ராயல்டி உரிமை என்ற பெயரில் ஒரு தொகையை ஐ.பி.ஆர்.எஸ். என்ற இசையமைப்பாளர்கள் மற்றும் கவிஞர்கள் சங்கத்துக்கும் ரேடியோ சேனல்கள் வழங்குகின்றன.
இந்த நிலையில், ஒலிபரப்பப்படும் பாடல்களுக்காக தயாரிப்பாளர் சங்கத்துக்கு பணம் கொடுப்பதால், கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் சங்கத்துக்கு ராயல்டி செலுத்த தேவையில்லை என்று உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் சில எம்.எம். சேனல்கள் வழக்கு தொடர்ந்தன.
இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், கவிஞர்கள் & இசை அமைப்பாளர்கள் சங்கத்துக்கு ராயல்டி கொடுக்கத் தேவையில்லை என்று பரபரப்பு தீர்ப்பை அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சில பாடலாசிரியர்களும், இசை அமைப்பாளர்களும் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக