சனி, 30 ஜூலை, 2011

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்


uthayan editorயாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் இன்று கடைமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த குகநாதன் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். வழமைபோல் பணியை முடித்துக்கொண்டு உதயன் பணிமனையிலிருந்து 200 மீற்றர் தூரத்துக்குள் அமைந்துள்ள அவரது வதிவிடம் நோக்கி நடந்து சென்ற வேளையில்,சென்று கொண்டிருந்த குகநாதனை பின்தொடர்ந்து வந்த இருவர் பின் புறத்திலிருந்து கம்பியினால் கடுமையாகத் தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக