சனி, 30 ஜூலை, 2011

மட்டு. வங்கி கொள்ளை சம்பவம்: வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற 6 சூத்திரதாரிகள் மன்னாரில் கைது

மட்டக்களப்பு வங்கிக் கொள்ளையின் பிரதான சூத்திரதாரிகள் இருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் மன்னாரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடொன்றுக்குத் தப்பிச் செல்வதற்காக மன்னாருக்குச் சென்று, அங்குள்ள தங்குவிடுதியொன்றில் தங்கியிருந்த போதே இவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் பயணித்த ஜீப் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் திகதி மட்டக்களப்பில் மக்கள் வங்கியை உடைத்து தங்க ஆபரணங்கள், ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இவர்கள் தேடப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் 28 ஆம் திகதி கடற்படையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக