திங்கள், 18 ஜூலை, 2011

உயிர் காக்கும் "108'ஐ காப்பாற்றஅரசு நடவடிக்கை தேவை

ஊழியர்கள் பற்றாக்குறையால், "108' ஆம்புலன்ஸ் திட்டம் முடங்கும் அபாயத்தில் உள்ளது. உயிர் காக்கும் சேவையான, "108'ஐ காப்பாற்ற, அரசின் நடவடிக்கை அவசியம்.தமிழகம் முழுவதும், தி.மு.க., ஆட்சிக் காலத்தில், உயிர் காக்கும் உன்னத சேவை திட்டத்தின் கீழ், "108' ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும், அதிநவீன வசதிகள் கொண்ட கருவிகளுடனும், 500க்கும் மேற்பட்ட இலவச ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன.
மாவட்டத்தின் பரப்பளவை கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், 30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அளிக்கப்பட்டன. மக்கள் மனதில், தனி இடத்தைப் பிடித்ததோடு, கிராமங்களிலும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுகின்றன.தற்போது, அதிகாரிகள் ஏற்படுத்தும் மன உளைச்சலாலும், சம்பளப் பற்றாக்குறையாலும், "108' ஆம்புலன்ஸ் திட்டம் முடங்கும் அபாயத்தில் உள்ளது."108' ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிலர் கூறியதாவது:மாநிலம் முழுவதும், "சுராஜ் மஸ்தா' என்ற வாகனமே, "108' ஆம்புலன்சாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாகனம், சாதாரணமாக ஒரு லிட்டர் டீசலுக்கு, 12 கி.மீ., ஓடும்.வேகமாக இயக்கினால், 10 கி.மீ., ஆகக் குறைய வாய்ப்புள்ள நிலையில், லிட்டருக்கு, 15 கி.மீ., கிடைக்கும்படி வாகனத்தை இயக்க, உயரதிகாரிகள் உத்தரவிடுகின்றனர்.அதுமட்டுமல்லாமல், சம்பள உயர்வு வழங்கப்படாததால், அனைத்து மாவட்டங்களிலும் டிரைவர்கள் பலர், மாற்றுத் தொழிலுக்கு மாறியதால், ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.
போலியான கணக்கு, உதிரி பாகங்கள் வாங்குவதில் மோசடி என, அரசின் இலவச, "108' ஆம்புலன்சால், அதிகாரிகள் பலரும், பல லட்சம் ரூபாயை சம்பாதித்தனர். தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை நீக்க வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில், "108' ஆம்புலன்ஸ் திட்டம் முடங்கும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.-நமது சிறப்பு நிருபர்-
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
2011-07-18 03:36:14 IST Report Abuse
நூத்தி எட்ட கூட்டுனா ஒம்போது வருது அதனால இந்த திட்டம் நிறுத்தப்படாது , மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள் நுமராலாஜி பாத்து திட்டம் தீட்டுவது , ஜனநாயகத்தில் அறிவில்லாத யார் வேண்டுமாலும் ஆட்சிக்கு வரலாம் என்பதனையே காட்டுகிறது , இப்படி ஒரு ஜனநாயகம் தேவைதானா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக