திங்கள், 18 ஜூலை, 2011

Sharukhan:நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு வில்லன்: சிவசேனா கடும் கண்டனம்

வெள்ளித்திரையில் ஷாருக்கான் ஹீரோவாக இருக்கலாம்.

மும்பையில் கடந்த 13ந் தேதி தீவிரவாதிகள் அடுத்தடுத்து 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தி, 19 பேரது உயிர்களை பலி வாங்கி, 100க்கும் மேற்பட்டோரை படுகாயப்படுத்தி உள்ளனர். அந்த துயரத்திலிருந்து மும்பை இன்னும் மீளவில்லை.
இந்த நிலையில் நடிகை கேத்ரினா கைப்பின் 27வது பிறந்தநாளையொட்டியும், அவரது படம் ஜிந்தாகி மிலேக்கி நா டோபரா' வெளியாகியிருப்பதை முன்னிட்டும், நடிகர் ஷாருக்கான் அவரது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஆடம்பர விருந்து ஒன்று அளித்ததாக தெரிகிறது.
இந்த விருந்தில் கேத்ரினா கைப்புடன் இந்திப்பட நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், பர்ஹான் அக்தர், அர்ஜுன் ராம்பால், சங்கி பாண்டே, அபய் தியோல், கரண் ஜோஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நடிகை கரிஷ்மா கபூர், அம்ரிதா அரோராவும்கூட இந்த விருந்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த விருந்து மிகவும் ஆடம்பரமாக நடந்திருப்பதுடன், விருந்தில் கலந்துகொண்டவர்களுக்காக  ஜிந்தாகி மிலேக்கி நா டோபரா' படம் பிரத்யேகமாக திரையிடப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த விருந்து நிகழ்ச்சியை பாராட்டி, அதற்காக ஷாருக்கானுக்கு நன்றி தெரிவித்து பர்ஹான் அக்தர் ஒரு இணைய தளத்தில் எழுதி உள்ளார்.

இந்த விருந்து தொடர்பாக சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து  சாமனா' பத்திரிகையில் கூறி இருப்பதாவது:
மும்பை குண்டுவெடிப்புகளை தொடர்ந்து பல பிரபலங்கள் தங்கள் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டனர். குரு பூர்ணிமா கொண்டாட்டங்களை தவிர்த்துவிட்டனர். குண்டுவெடிப்பு நாளில் பிரான்ஸ் நாட்டு அரசு அளித்த விருதைக்கூட நடிகை ஐஸ்வர்யாராய் ஏற்க மறுத்து விட்டார். ஆனால் ஷாருக்கானுக்கு அந்த விருந்தினை ரத்து செய்யும் உணர்வு இல்லை. வெள்ளித்திரையில் அவர் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு வில்லன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக