ஞாயிறு, 5 ஜூன், 2011

Jaffna Municipal றெமிடியஸ் ஆளும் கட்சிக்கு தாவல்!

யாழ் மாநகரசபை எதிர்கட்சி(TNA) தலைவர் றெமிடியஸ் ஆளும் கட்சிக்கு தாவல்!

யாழ் மாநகரசபையின் எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ், ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இன்று மாறியுள்ளதாக யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

ஏதிர்வரும் மாநகரசபை திட்டங்களில் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் மாநகரசபை மாதாந்த கூட்டங்களில் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமிடியஸ் உடன் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்டபோதும் முயற்சி பலனளிக்கவில்லை. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தமக்கு எந்தவித உத்தியோகப+ர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை என கூறினார். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு விசேட கூட்டமொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டவுள்ளதாகவும் மாவை சேனாதிரசா குறிப்பிட்டார்.
23 ஆசனங்களை கொண்ட யாழ் மாநகர சபைக்கு 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பு 13 ஆசனங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 8 ஆசனங்களையும் தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சுயேட்சைக்குழு ஆகியன தலா ஒரு ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக