ஈழப்பிரச்சினையில் முடிந்தவரை குரல் கொடுத்த பாரதிராஜா, அதன்பின் தனது அலுவலகத்தில் கல்லெறி சம்பவம் நடைபெற்ற பின் அப்படியே ஒதுங்கிக் கொண்டார். தெக்கத்தி பொண்ணு என்ற படத்தை இயக்குவதற்காக சொந்த மண்ணான தேனிக்கு பயணப்பட்டு விட்டார். இயக்குனர் சங்க தலைவராக இருந்தாலும் வருடத்திற்கு இரு முறை அவர் கூட்டத்திற்கு வருவதே பெரிசு என்கிற நிலைமை தான் நீடிக்கிறது இப்போது.
எனவே வருகிற தேர்தலில் இவருக்கு பதிலாக வேறு யாரையாவது நிறுத்தலாம் என்ற யோசனையை முன் வைக்கிறார்களாம் சங்கத்தில். ஆனால் அவர் பெரிய சாதனையாளர். அவரை பார்த்து தான் நாமெல்லாம் சினிமாவுக்கு வந்தோம்.
அந்த ஒரு விடயத்துக்காகவாவது அவரை மதிக்க வேண்டும் என்கிறார்களாம் பல உறுப்பினர்கள். ஆனால் இந்த சலசலப்புகள் எதுவுமே என்னை பாதிக்காது என்று கூறுவது போல தேனியிலேயே தங்கிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறதாம் பாரதிராஜாவின் மனசு.
என்ன நடக்கும் என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக