ஞாயிறு, 5 ஜூன், 2011

அயன் வசூலை முறியடித்தது கோ! K.V.Anand

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ஆனந்த் இயக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கோ.

ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல் ஆகியோரது அட்டகாசமான நடிப்பில் வெளியாகி, கே.வி.ஆனந்த் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜின் மயக்கும் பாடல்களில் உருவாகிய கோ படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

50 நாட்களைத் தொட்டுள்ள கோ படம், தற்போது அயன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாம். அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடி வரும் கோ படத்தில் ஜீவா போட்டோ ஜர்னலிஸ்ட் ஆக நடித்துள்ளார். முன்னாள் ஹீரோயின் ராதாவின் மகள் கார்த்திகா அவருக்கு ஜோடியாக, பத்திரிக்கையாளராக அசத்தலாக நடித்துள்ளார்.

நல்லவனாக நடித்து வஞ்சகமாக ஏமாற்றும் போலி அரசியல்வாதியாக அஜ்மல் வித்தியாசமான ரோலில் அருமையாக நடித்துள்ளார்.
இப்படம் தெலுங்கில் ரங்கம் என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றுள்ளது.
கோ படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக என்னமோ ஏதோ பாடல் அத்தனை பேரின் வாயிலும் முனுமுனுப்பை ஏற்படுத்தி விட்டது.

படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் படத்தில் நடித்தவர்களும் சரி, ஆனந்த்தும் சரி பெரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக