புதன், 8 ஜூன், 2011

நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முயற்சி : விமல் வீரவன்ச

சிலர் மோதல்களை உருவாக்கி நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முயற்சி : விமல் வீரவன்ச

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பொலன்னறுவை ஹிங்குரான்கொடை கிராமத்திலுள்ள 46 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரவிக்கையில், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் அமெரிக்கப் பிரதிநிதி இலங்கையை விமர்சனம் செய்வதன் மூலமும், செனல் 4 வீடியோ பதிவுகளை காண்பிப்பதன் மூலமும் இலங்கையில் யுத்தக் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பிரச்சாரப்படுத்தி சிலர் பிரச்சினைகளை தோற்றுவித்து வேண்டுமென்றே மோதல்களை உருவாக்கி நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக