புதன், 8 ஜூன், 2011

இலங்கை: பேருந்துகளில் 3 மொழிகளில் பெயர்ப் பலகை



இலங்கையில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் 3 மொழிகளில் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து சபை மற்றும் பொது போக்குவரத்து அமைச்சகத்திடம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
இதையடுத்து, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகள் அமைந்த பெயர்ப்பலகை இனி இலங்கை பஸ்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் முடிவின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக