புதன், 22 ஜூன், 2011

வவுனியா நகரசபை தலைவராக கனகையா!

வெற்றிடமாகவுள்ள வவுனியா நகர சபையின் தலைவர் பதவிக்கு சபை உறுப்பினரான ஐயாத்துரை கனகையாவை நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் புனரமைக்கப்பட்ட வவுனியா வரியிறுப்பாளர் சங்கத்தினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக பெரும்பான்மை நகரசபையின் 9 உறுப்பினர்கள் கனகையாவை தலைவராக நியமிப்பதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என இணக்க கடிதத்தில் ஒப்பமிட்டிருந்தனர்.

கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக சபை நிர்வாகம் நடைபெறவில்லை. மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வில்லை. நகர எல்லைக்குள் அபிவிருத்தி செயல் பாடுகள் முடங்கியுள்ளது. இந்த நிலையில் உடனடியாக சபை கூட்டம் இடம்பெற வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் வரியிறுப்பாளர் சங்கம் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணக்கத்தை ஏற்படுத்த பேச்சுக்களை நடத்தியது.
நேற்று செவ்வாய் காலை வவுனியா வந்திருந்த தமிழரசு கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா வரியிறுப்பாளர் சங்க பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் சபை உறுப்பினரான கனகையாவை தலைவராக நியமிக்க இணக்கம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக