செவ்வாய், 21 ஜூன், 2011

பெண்களின் கற்பை சூரையாடிய அனில் சாந்த ஜோர்தானில் கைது

ஜோர்தானில் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில்புரிகின்ற பெண்களை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகப்படுத்திவந்த சந்தேகத்தின் பேரில் இலங்கை சிங்களப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை தளமாக கொண்ட தொழில் மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஜோர்தான் ஆடைத்தொழிற்சாலையின் பிரதம முகாமையாளரான அனில் சாந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பங்களாதேஷைச் சேர்ந்த பெண்ணொருவர் அனில் சாந்தவுக்கு எதிராக கொடுத்த வாக்குமூலத்தை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாட்சியம் வழங்கிய குறித்த பெண்ணை ஜோர்தானில் இருந்து தனது சொந்த நாட்டிற்கு செல்வதற்கு இந்த நிறுவனம் உதவி செய்துள்ளது.

அனில் சாந்த அப்பாவி என்றும், கிளசிக் நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்றும் கிளசிக் நிறுவனத்தின் முகாமைத்துவபீடம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசாரணைக் குழுவொன்றையும் ஜோர்தானுக்கு அனுப்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக