செவ்வாய், 21 ஜூன், 2011

பாரிய ஆயுதக் கடத்தல்: 5 லொறிகளுடன் 10 பேர் கைது,வடக்கில் இருந்து தெற்கிற்கு

வடக்கில் இருந்து தெற்கிற்கு 5 லொறிகள் மூலம் கடத்தப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் யுத்த உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இரும்பு ஏற்றிச் செல்வதற்கென பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி மில்லியன் பெறுதியான யுத்த உபகரணங்கள் மற்றும் ஆயதங்கள் என்பன இவ்வாறு கடத்தப்பட்டுள்ளன.

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமரசிறி சேனாரட்னவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

லொறியில் ஏற்றிச் செல்லப்பட்ட பொருட்களில், மோட்டார் குண்டுகள், ரவைகள், பித்தளை, குண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் அச்சு உள்ளிட்டவை காணப்பட்டதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த 5 லொறிகளும் கிளிநொச்சி, மாங்குளம், மற்றும் ஓமந்தை போன்ற சோதனைச் சாவடிகளைக் கடந்து வவுனியாவிற்கு வந்தது எப்படி என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

லொறியில் பயணித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக