செவ்வாய், 7 ஜூன், 2011

கடலரிப்பு : நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, ஒலுவில், கல்முனை, பாண்டிருப்பு மற்றும் மருதமுனை போன்ற கரையோர

அம்பாறையில் கடலரிப்பு : பிரதேசவாசிகள் அச்சம்அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் அண்மைக்காலமாக பாரிய கடலரிப்புக்குள்ளாகி வருவதனால் பிரதேசவாசிகள் மிகவும் அச்சம் தெரிவிக்கின்றனர்

நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, ஒலுவில், கல்முனை, பாண்டிருப்பு மற்றும் மருதமுனை போன்ற கரையோர பிரதேசங்களிலுள்ள கடலோர நிலப்பரப்புகளை நாளுக்கு நாள் கடல் தனதாக்கிக் கொண்டு வருகின்றது.

அடிக்கடி கடல் கொந்தளிப்பு ஏற்படுவதனாலும் கடல் மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்வதனாலும் கடலரிப்பு அதிகரிப்பதற்கான காரணமாக இருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் கடற்கரையோரங்களில் வளர்ந்திருந்த அடம்பன்கொடி, இராவணன் மீசை, எழுத்தாணிப்பூண்டு மற்றும் தாழை போன்ற மரங்கள் அழிவடைந்த நிலையில் இவை இது வரை மீள நடுகைக்கு உட்படுத்தப்படவில்லை.

கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசலை அண்டியுள்ள கடற்கரை பிரதேசத்தில் பாரிய பாறாங்கற்கள் போடப்பட்டிருந்த போதிலும் அதனையும் தாண்டி கடலரிப்பு ஏற்பட்டு வருகின்றது.

இவ்வாறான கடலரிப்பு தொடருமாயின் கடற்கரைப் பிரதேசமொன்று எதிர்காலத்தில் இல்லாமல் போவதுடன் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் தங்களது வள்ளங்களையோ இயந்திரப்படகுகளையோ தோணிகளையோ நிறுத்தி வைப்பதில் பலவிதமான கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்ற அச்சம் நிலவுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக