செவ்வாய், 7 ஜூன், 2011

சன் சீ கப்பலில் வந்த அகதிகளின் ஒப்பந்தப் பத்திரங்கள் நோர்வேயில் பிடிபட்டன! - கனடியப் பத்திரிகை

பாங்கொக்கைத் தளமாக வைத்து செயற்பட்டு வந்த கப்பல் மூலம் ஆட்களைக் கடத்தும் குழு திறமையாக ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இரகசியமானதுமாக இருந்த போதிலும் அது மதிநுட்பமானதாக இருக்கவில்லையென நசனல் போஸ்ற் என்ற கனடியப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அந்தக் குழு கனடாவிற்கு அனுப்பப்பட்ட அகதிகள் பயண முடிவில் தரவேண்டிய பணத்திற்கான உறுதிப் பத்திரத்தை நேர்வேயிலுள்ள தங்களின் தொடர்புகளிற்கு அனுப்பும் போது பிழையான ஒரு முகவரிக்கு அனுப்பிவிட்டார்கள் என்பதை வெளியிட்டுள்ளது.

அப்படிக் கிடைக்கப்பெற்ற அந்தப் பத்திரங்களை அந்த முகவரி நபர்கள் நேர்வேஜியப் பொலிசாரிடம் கையளித்துள்ளனர். நோர்வேஜியப் பொலிசார் அதனை கனடாவிலுள்ள பொலிசாரிருக்கு கையளித்ததன் மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

முற்பணமாக ஐந்து ஆயிரம் டொலர்கள் வரையான தொகை பெறப்பட்டு மீதம் செலுத்த வேண்டிய தொகையான 5 ஆயிரம் டொலர்களில் இருந்து 30 ஆயிரம் டொலர்கள் வரையான தொகை கனடாவைச் சென்றடைந்ததும் பெறப்படும் என்று கையெழுத்துப் பெறப்பட்டது. இந்தப் பத்திரங்களின் மூலம் கனடாவிற்கான இந்தக் கடத்தலில் நோர்வேயிலுள்ளவர்களின் பங்கும் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் மேற்படி கப்பலில் வந்தவர்களால் எழுதப்பட்டதால் இவை முக்கியமானவை எனத் தெரிவித்துள்ள கனடியப் பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் இந்த நடவடிக்கையில் சிறீலங்கா தாய்லாந்து சிங்கப்ப10ர் மலேசியாவிலுள்ளவர்கள் இணைந்து செயற்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலின் வருகையை கனடிய அதிகாரிகள் அறிந்திருந்தாலும் இந்த ஒப்பந்தங்கள் அகப்பட்டது கனடிய அதிகாரிகளிற்கு பல விபரங்களை மேலதிகமாக வழங்கியுள்ளதையும் குறிப்பிட்டுள்ள நசனல் போஸ்ற் நொர்வேயில் பேரின்பநாயகம் சிவபரம் கைது செய்யப்பட்டதையும் குறிபிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக