புதன், 29 ஜூன், 2011

பாராளுமன்ற பொது கணக்கு குழு அறிக்கைக்கு திமுக திடீர் ஆதரவு


நடப்பு நிதியாண்டுக்கான பாராளுமன்ற பொது கணக்கு குழு, மீண்டும் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன், சபாநாயகரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட முதல் அறிக்கையை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முயன்றார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் தற்போதைய குழுவில் பழைய அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்கள், அந்த அறிக்கையின் விவரங்களை உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

அவர்களுடைய கோரிக்கைக்கு தி.மு.க. மற்றும் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக