செவ்வாய், 21 ஜூன், 2011

செக்ஸ் தொல்லை: கணவன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற பெண்!

சென்னை: குழந்தைகள் முன் தன்னை செக்ஸுக்கு அழைத்து தொந்தரவு செய்த கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

ம்மிடிப்பூண்டி திருபுழல்கோட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் அசோக் (வயது 36). மரம் அறுக்கும் பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு அமுதா (33) என்ற மனைவியும், சொர்னா (13), சோபனா (10), சொப்னா (8), சுவாதி (6) ஆகிய 4 மகள்களும் உள்ளனர்.

அமுதா ரப்பர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தினமும் குடித்துவிட்டு வந்து அமுதாவிடம் தகராறு செய்வாராம் அசோக். குழந்தைகள் இருக்கும் போதே உடல் உறவுக்கு அழைப்பாராம். இது அமுதாவிற்கு பிடிக்க வில்லை.

மேலும் அடிக்கடி செக்ஸ் தொந்தரவு கொடுத்ததால் வெறுப்படைந்தார். ஆசைக்கு இணங்க மறுத்ததால் வேறு யாருடன் தொடர்பு வைத்து இருக்கிறாயா என்று கேட்டு அசோக் அடித்து உதைப்பாராம். இதனால் மனம் உடைந்த அமுதா கணவரை தீர்த்து கட்ட திட்டமிட்டார்.

ஒரு பெரிய கருங்கல்லை வேலைக்கு சென்ற இடத்திலிருந்து எடுத்து வந்து வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் தகராறு செய்து விட்டு அசோக் தூங்கிவிட்டார். அமுதாவும் தூங்குவது போல் நடித்தார். கணவர் நன்றாக தூங்கி கொண்டு இருப்பதை உணர்ந்த அவள் மறைத்து வைத்திருந்த கல்லை தூக்கி அசோக்கின் தலையில்போட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிவிட்டார்.

உடனே அமுதா தனது மகள்களை எழுப்பி அப்பா மீது யாரோ கல்லை போட்டு விட்டு ஓடி விட்டதாக நாடகமாடினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அசோக்கை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணான தகவல்களை சொல்லிய அமுதா பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டார். கணவரை தான் கொலை செய்ததை வாக்கு மூலமாக கொடுத்தார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது தந்தை, தாயைப் பிரிந்த குழந்தைகள் 4 பேரும் கதறி அழுததைக் கண்ட அனைவரும் கண்கலங்கினர்.

English summary
Police arrested a woman who killed her husband for his continuous sex tortures in Gummudipoondi near Chennai.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக