திங்கள், 6 ஜூன், 2011

இலங்கையருக்கு சவுதியில் 430 சவுக்கடி

சவுதி அரேபியாவில் குடித்துவிட்டு மதுபான விற்பனையில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு 5 வருட சிறைத் தண்டனையும் 430 சவுக்கடியும் வழங்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் தெற்கு நகரமான டைப் பகுதியில் இவர் மதுபான விற்பனையில் ஈடுபட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்கு 5 வருட சிறைத் தண்டனையும், குடிபோதையில் இருந்தமையால் 80 சவுக்கடிகளும் மதுபான விற்பனையில் ஈடுபட்டதால் 70 சவுக்கடிகள் 5 முறையும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு தண்டனை முடிந்தவுடன் அவரை நாடு கடத்துமாறும் அவரது பெயரை கறுப்பு பெயர் பட்டியலில் இணைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக