திங்கள், 6 ஜூன், 2011

இயக்குநர் சங்கத்தேர்தல் : பாரதிராஜா - அமீர் மோதல்!

bharathiraja, ameer to clash in Tamil Film Directors Association
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு டைரக்டர்கள் பாரதிராஜாவும், அமீர் நேரடியாக மோதுகின்றனர். தமிழ்திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். இந்தாண்டுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர்களாக 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதிராஜா வெற்றி பெற்று தலைவராக இருக்கிறார்.

இந்நிலையில் இந்தாண்டுக்கான தலைவர் போட்டிக்கும் பாரதிராஜாவே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமீர் போட்டியிடுகிறார். துணை தலைவர் பதிவிக்கு ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனனும், செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்மணியும், பொருளாளர் பதவிக்கு எழில், ஜனநாதன் ஆகி‌யோரும் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் வசந்தபாலன், சிம்புத்தேவன், பிரபுசாலமன், வெங்கடேஷ், பாலசேகரன் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக