ஞாயிறு, 29 மே, 2011

அதிமுக வெற்றி :விரலை வெட்டி பெண் நேர்த்திக்கடன்

நாம் முன்பே குறிப்பிட்ட படி இதோ ஒரு மாது சிரோன்மணி ஜெயலலிதா அம்மையாருக்கு மிகவும் பிடிக்கும் என்பது தெரிந்தவுடன் தனது கால்விரலை வெட்டி காணிக்கையாக்கி உள்ளார். ஒரு மெகலோ மேனியா பெண்மணியின் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் இனி தொடரும் வாழ்க தமிழ் நாடு.

சேலம் தாதகாப்பட்டி கேட் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. அ.தி.மு.க. மேலவை பிரதிநிதி. இவரது மனைவி வாணி(40). அ.தி.மு.க. மீது தீவிர பற்று கொண்டவர். தேர்தல் நேரத்தில் இவர் அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

அப்போது அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டால் கை பெருவிரலை காணிக்கையாக்குகிறேன் என்றார். அதன்படி அ.தி.மு.க. அமோக வெற்றி ஜெயலலிதாவும் முதலமைச்சர் ஆகிவிட்டார் என்பதால் நேர்த்திக்கடன் செலுத்த வாணி முடிவு செய்தார்.
இன்று காலை தனது வீட்டில் இருந்து வாணி கோவிலுக்கு புறப்பட்டார். பின்னர் காளியம்மனுக்கு முன் நின்று கத்தியால் தனது பெருவிரலை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார். ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் வாணி மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்தவர்கள் ஓடிச்சென்று அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.  ஏராளமான அ.தி.மு.க.வினர் வாணியை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாணிக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி கொடுத்து கோவைக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு பரிந்துரை செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக