செவ்வாய், 31 மே, 2011

கனிமொழி - நடிகை குஷ்பு சந்திப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் கனிமொழி 30.05.2011 அன்று காலை 10.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் ஆ.ராசா மற்றும் சரத்குமாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, காலை 9.30 மணியிலிருந்து நீதிமன்ற லாக் அப் அறையில் காத்திருந்தார். அதன் பிறகு 10.30 மணிக்கு நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டார். இருக்கையில் அமர்ந்த அவர், தனது கணவர் அரவிந்தனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

இதையடுத்து காலை 10.45 மணியளவில் நடிகை குஷ்பு நீதிமன்ற அறைக்கு வந்தார். நேராக கனிமொழியின் இருக்கைக்குச் சென்று அவரிடம் கை குலுக்கி பேசினார். இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக