செவ்வாய், 31 மே, 2011

நிறைய கல்லூரிகளில் இந்த மாதிரி மன விகாரம் கொண்ட தாலிபான்கள் இருக்கத் தான் செய்றானுக .


சாவகாசமாக பத்தரைக்கு எழுந்து  கூகிள் நியூஸ் பார்க்கையில் நெஞ்சம் பதறி அதிர்ச்சியில் உறைந்து போனேன் ...

இருபாலரும் பயிலும் கேளம்பாக்கம் SMK போம்ரா பொறியியல் கல்லூரியில் வளாகத்திற்குள் மாணவ மாணவியர் ஒருவரோடு ஒருவர் எந்த சூழலிலும் பேசிக் கொள்ளக் கூடாது என்ற விதிமுறை இருக்கிறதாம் (கல்லூரி இருப்பது சென்னையிலா ஆப்கானிஸ்தானத்திலா என்று தெரியவில்லை ?)... விதியை மீறி யாரும் பேசிக் கொள்ளக் கூடாது என்பதற்காக மாணவர்களை கண்காணிக்க அனைத்து வகுப்பறைகளிலும் வரந்தாக்களிலும் லேப்களிலும் நூலகத்திலும் கண்காணிப்பு காமெராக்கள் வேறு பொருத்தப் பட்டிருக்கிறதாம் (தாலிபானுக்கு பொறந்த dash மவனுக்கெல்லாம் எவண்டா கல்லூரி நடத்த பெர்மிசன் கொடுத்தது ?)... சென்ற வாரம் உத்திர பிரதேச மாணவி அனித்ரா சக மாணவரிடம் பேசிக் கொண்டிருப்பது கண்காணிப்பு காமெராவில் பதிவாக கல்லூரித் தலைவர் போம்ரா, மாணவி அனித்ராவை கண்டபடி திட்டியிருக்கிறான் ...ஆயிரம் ருபாய் அபராதம் வேறு விதிக்கப் பட்டது ( எப்படியெல்லாம் பணத்தை பிடுங்குரானுங்க தேவடியா பசங்க ) இதற்க்கெல்லாம் உச்சமாக பணப் பொறுக்கி போம்ரா வின் உதவியாளன் அல்லக்கை முண்டம் சதீஷ் மாணவியர்களின் விடுதிக்கே போய் அனித்ராவை கண்டபடி ஆபாசமாய் திட்டியிருக்கிறான்... மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அனித்ரா, தனியாக படிக்க வேண்டும் நீங்கள் பக்கத்து அறைக்கு செல்லுங்கள் என நண்பர்களை அனுப்பி வைத்து விட்டு தனதுயிரை தானே மாய்த்துக் கொண்டிருக்கிறாள் ...

அனித்ரா யாருன்னே தெரியாத எனக்கே அழுகை அழுகையா ஆத்திரம் ஆத்திரமா வருதுன்னா அவளோட அப்பா அம்மாவுக்கு உறவினர்களுக்கு நண்பர்களுக்கு எப்படி இருக்கும் ? உத்திர பிரதேசத்திலிருந்து பத்தொன்பது வயசிலே படிக்கணும்னு எத்தனையோ கனவுகளோட எதிர்பார்ப்போட தன்னம்பிக்கையா சொந்த ஊரை தாண்டி மாநிலம் விட்டு மாநிலம் வந்தவள கல்வி கபோதிகள் கருமாதி பண்ணிட்டாங்களே ... விருந்தாளிக்கு பொறந்த பீ திங்கிர பன்னிகளா ....

என்னால கோர்வையா எழுதவோ யோசிக்கவோ முடியல இப்போ ...

போம்ரா காலேஜில மட்டும் தானில்ல ... நிறைய பொறியியல் கல்லூரிகளில் இந்த மாதிரி மன விகாரம் கொண்ட தாலிபான்கள் இருக்கத் தான் செய்றானுக ...எனக்கு நல்லா தெரிஞ்சு ... தஞ்சாவூர் PRIST பல்கலைகழகத்தில் போன வருஷம் பொண்ணுகளோட பேசினாங்க என்கிற ஒரே காரணத்துக்காக மூணு பசங்களுக்கு பதினஞ்சு நாள் சஸ்பென்சனும் சில ஆயிரங்களில் அபராதமும் விதிச்சாங்க ... வட இந்திய பொண்ணு ஒருத்தி இந்த பிரச்சனைய UGC கமிட்டி விசிட்ல எழுப்ப கமிட்டி மெம்பர்சால அந்த பொண்ணு என்ன சொல்ல வாராங்கிறதா புரிஞ்ச்சுக்கிரதுக்கே ரொம்ப நேரம் ஆச்சுதாம்... இப்பவும் அதே கண்றாவிதான் தொடர்ந்துட்டு இருக்கு ... பேசினா பைன் , சஸ்பென்சன், லேப் எக்ஸ்சாம்ல பெயில் ... நல்லா உருப்படும் காலேஜு ...

போம்ரா ,PRIST மட்டுமில்ல .... தமிழ் நாட்டுலே இருக்கிற கால் வாசிக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இந்த கருமாந்திரம் தான் ... சென்னையையே எடுத்துக்குவோம் ... கல்வி வள்ளல் ஜேப்பியார் அவர்களோட கல்லூரிகளான Sathya Bama ,St Joseph's ,Panimalar, SRR ல எல்லாம் யாராவது பேசினா அடி தான் உதை தான் .... பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன்ல கட்டி வச்சு அடிப்பானுகளாம் ... வேல் டெக் , அருணை ,காஞ்சி பல்லவன் ,நாகப்பட்டினம் காலேஜ் பேரு மறந்து போச்சு ,ராசிபுரம் முத்தயாம்மாள், பி ஜி பி ,பாவை ,செங்குந்த்தர் ..... பட்டியல் போட்டா பக்கம் ரெண்டை தாண்டிரும் ... தென் தமிழக காலேஜ் களை பத்தியெல்லாம் சொல்லவே வேண்டாம் ... நாதாரி பயலுக ...

ஆமா .. இவனுக எல்லாம் எதுக்காக co-ed college நடத்துரானுங்க ... பேசாம திருச்செங்கோடு விவேகானந்தா மாதிரி மகளிர் மட்டும் ஆரம்பிக்க வேண்டியது தானே ... இல்லே உலகில் முதல் முறையா பசங்களுக்கு மட்டும்னு ஆரம்பிச்சு தொலைய வேண்டியது தானே ... உன்னோட வக்கிர புத்திய எல்லாம் ஏண்டா பிஞ்சு மனசில புகுத்துற பன்னாடை பன்னிகளா ...

அனித்ராவின் மரணம் முதல் முறையாக நடந்திருப்பது இல்லை ; கடைசியாகவும் இருக்கப் போவதில்லை ....

வேறொரு பெயரில் வேறொரு கல்லூரியில் இதே வகை மரணம் நடந்தே தீரும் ....

அது உங்கள் மகளாகவோ தங்கையாகவோ நண்பராகவோ உறவினராகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ...

அனித்ரா விற்கு கசிந்து வழியும் கண்களோடு தோழனின் முத்தங்கள் ..

 இது சற்று பழைய செய்திதான் ஆனாலும் இதில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் மறக்கப்படக்கூடதவையாகும் 
http://neo-periyarist.blogspot.com/2010/05/dash.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக