திங்கள், 30 மே, 2011

புனர்வாழ்வு பெற்றுவந்த சுமார் 900 முன்னாள் போராளிகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி வவுனியாவில் விடுதலை


புனர்வாழ்வு பெற்றுவந்த சுமார் 900 முன்னாள் போராளிகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் வைத்து பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார் தெரிவித்தார்.

இந் நிகழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு அமைச்சின் சந்திரசிறி கஜதீர தலைமையில் வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதில் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் சிநேகபூர்வ விளையாட்டு விழா நடைபெறவுள்ளது. இதன்போது அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையிலான புனர்வாழ்வு பெற்று வருவோரும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்விருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையிலான தேசிய இளைஞர் மன்றத்தின் மாணவர்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டி இடம்பெறவுள்ளது. இப் போட்டியின் பின்னர் இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக