திங்கள், 30 மே, 2011

TNA உள்ளே பேச்சு: வெளியே வசை பாடல்

தமிழருக்கான தீர்வை TNA பெற்றுத்தரும் என நம்புவது எப்படி?
சிவராசா
ஊடகங்களில் அரசை விமர்சிப்பதை விடுத்து பேச்சுக்களின்போது அவைகுறித்துக் கலந்துரையாடுவதே சிறப்பு. ஊடகங்கள் ஊதிப் பெருப்பிக்கவில்லை, ஹினிதி ஊதுவதை ஊடகங்கள் உள்வாங்கி வெளிக்கக்குகின்றன.

அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சிப்பதிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழ் மக்களிடையே பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பேச்சுக்களில் தமக்குத் திருப்தி இல்லையென்றும், அரசாங்கத்திடமிந்து எதனையும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தாம் நம்பவில்லை எனவும் பேச்சுக்களில் பங்கெடுத்துவரும் கூட்டமைப்பு பிரமுகர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்து வருகின்றனர். இது ஆரோக்கியமானது அல்ல எனவும் பேச்சுக்களை நம்பிக்கையுடன் தொடர்ந்தும் நடத்த வேண்டும் எனவும் அதே அணியிலுள்ள பலர் கூட்டமைப்பின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழ்க் கூட்டமைப்பிற்குள் இப்போது உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என உண்மையாகவே கூட்டமைப்பு நினைக்குமாயின் அரசாங்கத்துடன் இதயசுத்தியுடன் பேச வேண்டும். அரசாங்கம் ஏமாற்ற முயன்றால் கூட இவர்கள் விட்டுக் கொடுத்துப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும். ஆனால் இன்று மாறாக இவர்கள் ஊடகங்களுக்குத் தம்மைப் பற்றித் தாறு மாறாக விமர்சனம் செய்கிறார்கள் எனத் தெரிந்திருந்தும் அரசாங்கம் விட்டுக் கொடுத்து பேச்சுக்களை நடத்தி வருகிறது.

இதனை இவர்கள் அரசாங்கத்தின் இயலாமை அல்லது கோழைத்தனம் எனக் கருதினால் அதனைவிட முட்டாள்தனம் எதுவுமாக இருக்க முடியாது. ஏனெனில் அரசாங்கம் இவர்களை நம்பி மட்டும் பேசவில்லை. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே அரசாங்கம் பேசிவருகிறது. அதனை இவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்டுத்தி அரசாங்கத்தைக் குறைத்து எடை போட்டு வருகின்றனர். அதன் விளைவே இவர்களது கட்டுமீறிய பொய்யான ஊடகப் பிரசாரம்.

இந்த உண்மை நிலையை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்காக எனக் கூறும் கூட்டமைப்பு என்றாவது தமிழ் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டதா என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். கேட்டால் தேர்தலில் எமக்கு மக்கள் ஆணை தந்துள்ளனர் எனத் தெரிவிப்பர். உண்மையில் இதுவரை காலமும் தேர்தலில் மக்கள் வேறு தெரிவின்றியே கூட்டமைப்பைத் தெரிவு செய்து வந்துள்ளனர். அத்துடன் கூட்டமைப்பு புலிகள் போன்று சில வீர வசனங்களைப் பேசி வந்தமையால் பாமர மக்களை இலகுவாக ஏமாற்றக் கூடியதாக உள்ளது.

ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இனியும் புலிக்கதை விளையாட்டு தமிழ் மக்களிடம் எடுபடாது. தமக்கு உண்மையாக சேவை செய்யக் கூடிய தலைவர்களையே அவர்கள் இனித் தெரிவு செய்வர்.

உண்மையில் தமிழ்க் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் முக்கியஸ்தருமான நல்ல தம்பி ஸ்ரீகாந்தா கேட்டது போன்று அரசாங்கம் தமிழருக்கு ஒன்றுமே செய்யாது, பொய்யாக ஏமாற்றுவதற்கே பேச்சுக்களைத் தம்முடன் நடத்துகின்றது எனக் கூட்டமைப்பு தெரிவித்துவரும் நிலையில் ஏன் அரசுடன் தொடர்ந்தும் பேச்சுக்குச் செல்கிறது. எனவே தமிழ்க் கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என்பது தெளிவாகப் புரிகிறது. இதனை சரியாக விளங்கிக் கொள்ள தமிழருக்குச் சிறிது காலம் தேவையாகவுள்ளது என்பதே உண்மை.

தேர்தல் என்றதும் தமிழ் மக்களைச் சந்திக்கச் செல்வது கூட்டமைப்பின் தந்திர வழக்கமாகும். இப்போது வடக்கில் தடைப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல்கள் இடம்பெறவிருப்பதால் முல்லைத்தீவிற்கும் கிளிநொச்சிக்கும் போட்டிபோட்டு செல்லத் தொடங்கியுள்ளனர். இதுவரை காலமும் அந்தப் பக்கமே திரும்பியும் பார்க்காத இவர்கள் இப்போது அங்கு சென்று மக்கள் சிரமப்படுவதாக அறிக்கை விடுகின்றனர்.

உண்மையில் இவர்கள் அங்கு வருவதை அப்பகுதி மக்கள் விரும்புவதில்லை. அண்மையில் இவர்களது வருகைக்கு மக்கள் நேரடியாகவே எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ஆனால் தம்மை மக்கள் சந்தித்துக் குறைகளைத் தெரிவித்ததாகவும் தாம் ஏதோ தீர்த்து வைத்ததாகவும் அறிக்கைகள் விட்டுள்ளனர். இவர்களது வருகை காரணமாக தமக்கு அரசாங்கத்தினால் கிடைக்கும் அபிவிருத்திகள் மற்றும் நிவாரணங்கள் தடைப்பட்டு விடுமோ என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். காரணம் மக்கள் குறை தெரிவிப்பது போலக் கூறி இவர்கள் தமது கற்பனையில் அறிக்கை விடுகிறார்கள்.

இதேவேளை தமிழ்க் கூட்டமைப்பினர் தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா ஜெயராமைச் சந்தித்து உரையாடுவதற்கு சந்தர்ப்பம் கேட்டும் இதுவரை அவர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. காரணம் தமிழ்க் கூட்டமைப்பின் தந்திரக் காய் நகர்த்தலும், இரட்டை வேடமும் இலங்கையில் மட்டுமல்ல; தமிழகத் தலைவர்களுக்கும் தெரிந்து விட்டது.

அடுத்து இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினை குறித்து தமிழ்க் கூட்டமைப்பி னால் ஒரு தீர்வை தமிழக அரசுடன் பேசி ஏற்படுத்தியிருக்க முடியும். ஏனெனில் தமிழக மற்றும் வடபகுதி மீனவர்களிடையேதான் கடந்த காலங்களிலும் சரி இன்றும் சரி பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆனால் கூட்டமைப்பு இவ்விடயத்தில் தமிழகத்தை ஒருபோதும் குற்றம் சாட்டியதே கிடையாது. வாய் திறந்தால் அங்கேயிருக்கும் தமது மனைவி பிள்ளைகளுக்குச் சிக்கல், தாம் அடிக்கடி சென்று ஓய்வெடுத்து வருவதற்குத் தடைவரும் என்பதால் நமது மீனவர்கள் துன்பப் பட்டாலும் பரவாயில்லை இவ்விடயத்தில் மெளனம் காப்போம் என்று இருந்து வருகின்றனர்.

உண்மையை உரைத் தால் இன்று தமிழ்க் கூட்டமைப்பு ஊடகங் களில் மட்டும்தான் அரசியல் நடத்தி வருகின்றது. கூட்ட மைப்பி லுள்ள சில பாராளு மன்ற உறுப் பினர்கள் ஊட கங்கள் சிலவற்றை நிர்வகித்து வருவத னால் அவர்களது ஊடகப் பிரசாரத்திற்கு குறை இல்லாதுள்ளது. தமிழ் மக்களும் இதனை நம்பி தமி ழ்க் கூட்டமைப்பினரே தமிழ் மக்களின் பிரதி நிதிகள் என்பதாக ஆதர வளித்து வருகின்றனர். ஏனைய சில தமிழ் ஊடகங்க ளும் தமிழ் மக்களி டையே கூட்டமைப்பை வளர்த்து விடுவதற்காகவும் தமது விற்பனைக்காகவும் பொய்ப் பிரசாரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

கூட்டமைப்பிலுள்ள ஆயுதக் குழுவில் அங்கம் வகிக்காத சிரேஷ்ட அங்கத்தவர்கள் ஓரளவு பொறுப்புடன் செயற்பட்டு வரு கின்றனர் எனக் கூறலாம். ஆனால் ஆயு தக் குழுவில் அங்கம் வகித்து அரசியலுக்கு வந்த பலரது போக்கு புலிகளின் அழிவுக்குப் பின்னர் சற்றே மாறுபட்டுக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

முன்னாள் புலி உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி புலம்பெயர் சமூகத்திடம் வசூல் செய்வதில் வடக்கிலுள்ள சில தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறானவர்களில் சிலர் கையும் களவுமாகப் பிடிபட்டும் உள்ளனர். இதனால் கூட்டமைப்பிற்கே அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே கூட்டமைப்பு இப்போது தமது அணிக்குள்ளே உள்ள புல்லுருவிகளை களைய வேண்டும்.

எவ்விடயத்திலும் காத்திரமான ஒரு அறிக்கையை தலைமை மட்டுமே விட வேண்டும். பக்குவமடையாத அனுவமில்லாத உறுப்பினர்கள் மக்களது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்பவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்குப் பல தேவைகள் உள்ளன. அரசியல் அதிகாரத்தை அனுபவம் உள்ளவர்களே கையாள வேண்டும். உங்களை நம்பியே மக்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். அதற்கு கைமாறு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு அல்லவா?

அரசாங்கத்திற்கு தமது நல்லெண்ணத்தைக் காட்டுகின்றோம் எனப் புறப்பட்டு இன்று அரசாங்கத்தின் மீது வசைபாடும் வேலையிலேயே கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் தொடர்பாக கலந்துரையாடப் பல விட யங்கள் உள்ளன. அவை தொடர்பாக எதுவுமே பேசப்படுவதில்லை. முயற்சி எடுப்பதுவும் இல்லை. இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக இயல்பு வாழ்வுக்குச் திரு ம்பவில்லை.

பலரைத் தேடி இன்றும் அவர்களது உறவுகள் அங்கும் இங்கும் அலைகின்றன. இவற்றைத் துரிதப்படுத்தி தமது மக்களுக்கு உதவுமாறு அரசாங்கத்திடம், கூட்டமைப்பு எப்போதாவது கேட்டார்களா? அரசாங்கமே கருணையுடன் அவை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றது. அதனை உங்களது தேவைக்காகக் கெடுத்துவிடாதீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக