திங்கள், 25 ஏப்ரல், 2011

Bollywood சாய்பாபா மறைவால் சோகத்தில் மூழ்கிய பாலிவுட்

மும்பை: சத்ய சாய்பாபா மறைவையொட்டி பாலிவுட் நட்சத்திரங்கள், இயக்குனர்கள், டிசைனர்கள் என அனைவருமே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


சத்ய சாய்பாபா உடல் நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினர்.

சாய்பாபா பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர்கள் மாதவனும், ராணா டக்குபட்டியும் தங்களது டுவிட்டரில் கூறியுள்ளனர்.

பாபா தனது பூவுடலை துறந்துவிட்டார் என்று தற்போதுதான் கேள்விப்பட்டேன். அவரது பக்தர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று இயக்குனர் ராம் கேபால் வர்மா கூறியுள்ளார்.

அவர் போதனைகள் வாழட்டும். என்றும் நமக்கெல்லாம் வழிகாட்டட்டும் என்று டிசைனர் வர்ஜா பஜாஜ் தெரிவித்துள்ளார்.

டிசைனர் சோனால் சவான் கூறுகையில், "நான் சாய்பாபாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று விரதம் இருக்கிறேன். நான் சாய்பாபாவின் தீவிர பக்தை. அவர் இறந்துவிட்டார் என்றே என்னால் நம்பமுடியவில்லை. இன்று உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சினின் பிறந்தநாள். ஆனால் இதே நாளில் உலகின் சிறந்த மனிதரான சாய்பாபா மறைந்துவிட்டார். அவரது மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தேன்", என்றார்.

நடிகர் விவேக் ஓபராய் டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:

"சத்ய சாய்பாபா இன்று காலை தனது மனித உடலைவிட்டுச் சென்றுவிட்டார். உடல் என்பது வெறும் வாகனம்தான். அவரது ஆத்மா தொடர்ந்து நமக்கு வழிகாட்டும்", என்று கூறியுள்ளார்.

சாய்பாபாவின் உடல் புட்டபர்த்தியில் உள்ள அவரது ஆசிரமமான பிரஷாந்தி நிலையத்தில் மக்கள் பார்வைக்காக இரண்டு நாட்கள் வைக்கப்படுகிறது.
English summary
Bollywood mourns the death of Sathya Sai Baba who passed way today at 7.40 am. Bollywood stars, directors and designers post condolence messages in their tweeter accounts.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக