செவ்வாய், 12 ஏப்ரல், 2011

திமுக குடும்பத்தில் இருந்து காப்பாற்ற அதிமுகவுக்கு வாக்களிக்க

தமிழக தேர்தல்: கோலிவுட்டின் ஆதரவு யாருக்கு?சென்னை, ஏப்.12:  நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக பிரசாரம் செய்தனர். எனினும் கோலிவுட்டில் அமைதியாக நடைபெற்றுவரும் பிரசாரம் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது.மாநிலத்தின் முதல் குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழ் சினிமாவை விடுவிப்பதாகக் கூறி பரந்துபட்ட திரைப்பட கூட்டமைப்பைச் சேர்ந்த, கோடம்பாக்கம், வடபழனி, தி.நகர், விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் திமுகவுக்கு எதிராக வாய்மொழி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கோலிவுட்டை திமுக குடும்பத்தில் இருந்து காப்பாற்ற அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஒவ்வொருவரும் 10 குடும்ப உறுப்பினர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என கேமராமேன் ஒருவர் தெரிவித்தார்.நான் தந்தை பெரியாரின் தொண்டர்.  என்னுடைய வாழ்வில் திமுகவைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் வாக்களித்ததில்லை. ஆனால் இப்போது பிடிக்கவில்லை என்றாலும் அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு தள்ளப்பட்டுள்ளேன் என அவர் கூறினார். எனினும் தனது பெயரை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.மாநிலத்தின் முதல் குடும்பத்தினர் கோலிவுட்டுக்குள் நுழைந்த பிறகு குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் காணாமல் போய்விட்டனர் என திரைப்பட ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.தமிழகத்தில் உள்ள 1300 திரையரங்குகளில் பெரும்பாலானவை முதல் குடும்பத்தினரின் பல்வேறு உறுப்பினர்களுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.  இதனால் மற்ற தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் அவர்கள் படங்களை தயாரிப்பதை நிறுத்திவைக்க நேரிட்டது என்றார் அவர்.திரைப்படங்கள் தயாரிப்பது குறைந்ததன் காரணமாக இந்தத் துறையில் பல்வேறு வர்த்தகங்களின் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான பாதிப்பு ஏற்பட்டதாக மற்றொரு திரைப்பட ஊழியர் ஒருவர் தெரிவித்தார். படப்பிடிப்பு நாட்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டிய அவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு எங்களது குறைந்தபட்ச படப்பிடிப்பு நாட்கள் ஒரு ஆண்டுக்கு 250 ஆக இருந்தது. தற்போது அது 100 நாட்களுக்கும் கீழே குறைந்துவிட்டது என்றார் அவர்.வடபழனியைச் சேர்ந்த தயாரிப்பாளர் விஜய் ராஜ் கூறுகையில், திரைத்துறையின் எதிர்காலத்துக்காக ஒட்டுமொத்த திரைத்துறையினரும் அதிமுகவுக்கு வாக்களிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக