செவ்வாய், 12 ஏப்ரல், 2011

Kandhahar விமான கடத்தலில் முக்கிய சதிகாரன் ; சிலி போலீசாரிடம் சிக்கினான்: சி.பி.ஐ.,விரைந்தது

சாண்டியாகோ: முக்கிய பயங்கரவாதிகளை சிறையில் இருந்து மீட்டு செல்லவதற்காக இந்திய விமானத்தை காந்தகாருக்கு கடத்தி சென்று இந்தியாவை பணிய வைத்தசம்பவத்தின் முக்கியப்புள்ளி பல ஆண்டுகள் கழித்து சிலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இவனிடம் விசாரித்து மேலும் தொடர்பான விஷயங்களை கறந்து எடுக்க மத்திய சி.பி.ஐ., போலீஸ் படையினர் சிலி நாட்டுக்கு புறப்படுகின்றனர்.

கடந்த 1999 ம் ஆண்டு டிசம்பர் 24 ம் தேதி இந்திய விமானத்தை துப்பாக்கி சகிதமாக காந்தகார் நகருக்கு கடத்தி சென்றனர். 160 பயணிகள் விடுவிக்கப்பட, இந்திய சிறையில் இருக்கும் முக்கிய பயங்கரவாதிகள் 3 பேரை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பத கடத்தல் காரர்களின் கோரிக்கை. இதன்படி மவுலானா மசூத் உள்பட 3 முக்கிய பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சதி திட்டத்தில் பண உதவி மற்றும் முக்கய ஆலோசகராக இருந்து இந்த கடத்தலை வெற்றிகரமாக நடத்திய பாகிஸ்தானை அப்துல்ரகூப் என்பவர் சிலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் போலி விசா மூலம் சிலிக்கு வந்தபோது இன்டர்போல் போலீசின் உதவியால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளான். இந்த தகவல் இந்தியாவுக்கு அனுப்பியதையடுத்து இந்திய சி.பி.ஐ., அதிகாரிகள் சிலி விரைந்துள்ளனர்.

யார் இந்த ரகூப்:? ரகூப் என்ற ரகூப் ஆல்வி பாகிஸ்தானை சேர்ந்தவன், இவன் விமான கடத்தல் சதிச்செயலுக்கு பிளான் போட்டு கொடுத்தவன. இத்துடன் இதற்கென ஹவாலா பணம் மூலம் 70 ஆயிரம் பயங்கரவாதிகளுக்கு கொடுத்து உதவியிருக்கிறான். இவனை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு கடந்த 2000 ல் ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது. இவனது கை ரேகையோ , புகைப்படமோ இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இந்த தருணத்தில் சிலியில் சிக்கியவன் ரகூப்தானா என்று கண்டறிய பெரும் சிரமப்பட வேண்டியது இருக்கும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக