செவ்வாய், 12 ஏப்ரல், 2011

பிரான்ஸில் பர்தா அணிந்த 2 பெண்கள் கைது France.Two arrests at burka ban protest

ஏப்.12:  பிரான்ஸில் பர்தா அணிய விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்ததையடுத்து பாரீஸில் பர்தா அணிந்து வந்த 2 முஸ்லீம் பெண்களை போலீசார் கைது செய்தனர்.பர்தா மீதான தடையை எதிர்த்து புரோவென்ஸில் உள்ள தனது வீட்டில் இருந்து கென்ஸா டிரைடர் என்பவர் பர்தாவுடன் பாரீஸுக்கு பயணம் செய்தார். புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவரும், மற்றொரு பர்தா அணிந்த பெண்ணும் நாட்ரடாம் தேவாலயத்துக்கு வெளியே கைது செய்யப்பட்டனர்.அந்த பெண்களுக்கு 150 யூரோக்கள் அல்லது 132 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படலாம் என டெலிகிராஃப் பத்திரிகை தெரிவித்துள்ளது.எனினும் சட்டவிரோதமாக கூடியதற்காக அவர்கள் எச்சரித்து விடப்பட்டதாக பொது உத்தரவு அதிகாரி அலெக்ஸிஸ் மார்சன் தெரிவித்தார்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக 5 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். சிறிது நேர காவலுக்குப் பின்னர், டிரைடர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தன்மீது வழக்கு தொடர வேண்டும். அப்போதுதான் ஐரோப்பாவின் மனித உரிமை நீதிமன்றத்துக்கு இதை எடுத்துச் செல்ல முடியும் என்றார்.இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. பெண்களை அடக்குவதற்காக மட்டுமே இது தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.இதனிடையே இந்த சட்டத்தை எதிர்த்து பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக