வெள்ளி, 8 ஏப்ரல், 2011

பிரசாரத்துக்கு வந்த திமுக தொண்டர் படுகொலை

ஆலங்குளம், ஏப்ரல் 8: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்துக்கு பிரசாரத்துக்காக வந்த திமுகவினரிடையே ஏற்பட்ட குழு மோதலில் ஒருவர் பலியானார். ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பூங்கோதையை ஆதரித்து பிரசாரம் செய்ய முன்னாள் அமைச்சர் ராதிகா செல்வியின் ஆதரவாளர்கள் ஆலங்குளம் வந்தனர். இவர்கள் அனைவரும் ஒரு தனியார் கல்லூரியில் தங்கியிருந்தனர். இதற்கிடையே நேற்று இரவு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மோதல் வெடித்தது. வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் திமுக தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக