வெள்ளி, 8 ஏப்ரல், 2011

Vaiko மீடியாக்களிடம் தேர்தல் குறித்து பேசவேண்டாம்: கட்சியினருக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை, ஏப்ரல் 8: மதிமுகவினர் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் எதுவும் பேச வேண்டாம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மதிமுக முடிவு செய்த பிறகு, இந்தக் கட்சியினர் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற்றியதற்காக அதிமுக அணிக்கு எதிராக இவர்கள் வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து வைகோ எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதற்கிடையில் மதிமுகவினர் மானசீகமாக திமுக அணியை ஆதரிப்பதாகவும், திராவிட இயக்கங்கள் விரைவில் ஒன்று சேரும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதவிர சில மாவட்டங்களில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மதிமுக மாவட்ட நிர்வாகிகள் சிலர் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுத்தனர். இந்தச் சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ``தேர்தல் குறித்து மதிமுகவினர் கருத்துகள் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்'' என வைகோ தன் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக