செவ்வாய், 7 டிசம்பர், 2010

சிகரெட் புகைக்கு ஈடானது செல்போன் கதிர்வீச்சு

சிகரெட் புøக்கு ஈடானது செல்போன் கதிர்வீச்சு என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். மக்களின் வசதிக்காக அனைத்து செல்போன் நிறுவனங்களும் சிக்னல் தெளிவாக கிடைக்கச் செய்வதற்காக மனிதர்கள் நெருக்கமாக வசிக்கும் உயரமான கட்டடங்களின் மேற்பகுதியில் டவரை நிறுவி வருகின்றன. இந்த டவரில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளையும் எந்த அளவிற்கு கடுமையாக பாதிக்கப்படுகிறது. என்பது குறித்து டிராய் அமைப்பு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பேராசிரியர் கிரிஷ்குமார் என்பவர் தலைமையில் ஆய்வை மேற்கொண்டது. ஆய்வில் மனிதர்கள் தங்களை அறியாமலேயே ஸ்லோ பாய்சனை ஏற்றுக்கொள்கின்றனர். அதாவது சிகரெட் குடிப்பதால் உண்டாகும் விளைவு செல்போன் கதிர்வீச்சில் உண்டாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கதிர்வீச்சு குறைந்த டவர்களை அமைத்து வருவதை போன்று இந்தியாவிலும் தனியார் நிறுவனங்கள் அதனை பின்பற்ற வேண்டும் என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக