செவ்வாய், 7 டிசம்பர், 2010

மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்- மறுபக்கம்.எச்சரிக்கை குழந்தைகளும், பெண்களும் இந்தக் கட்டுரையை படிக்க

ஆர்.ரங்கராஜ் பாண்டே -

எச்சரிக்கை: குழந்தைகளும், பெண்களும் இந்தக் கட்டுரையை படிக்க வேண்டாம்.

விளம்பர வியூகங்கள் பல வகைப்பட்டவை. அதே தொழிலாகக் கொண்ட, "மார்க்கெட்டிங்' பிரிவினர், புதுப்புது யோசனைகளை செயல்படுத்துவர். ஆனால், கலைத்தாயின் தாகத்தைத் தணிக்க வந்த தலைமகனான கமல்ஹாசனைப் போல வித்தியாசமாக சிந்திப்பவர்கள், இதுவரை தமிழகத்தில் பிறக்கவில்லை; இனி பிறக்க வேண்டியதும் இல்லை.

தான் நடித்த, "மன்மதன் அம்பு' என்ற படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார் கமல். அதில் இடம்பெறும் ஒரு பாடலை, சதாவதானியான அவரே இயற்றியும் உள்ளார். பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்தக் கவிதையை அமைத்துள்ளார் கமல். அதை, புரட்சி நடிகை த்ரிஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அழுத்தம் திருத்தமாக, நடை, உடை, பாவனைகளோடு சொல்லிக்காட்டினார்.அந்தக், "கவிதை' இப்படி போகிறது:

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
....

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கொள்
கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
....

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையும்
கூட நின்றுவன் உதவிட வேண்டும்
....

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
....

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு
....

தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
...

மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையில் அவன்
காளத்தி வேண்டும் என்றான்
...

வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப் பெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!
....

இதுதான் அந்தக், "கவிதை.'தமிழ் சினிமாவின் தரத்தை, "சர்வதேச லெவலுக்கு' உயர்த்தியே தீருவேன் என்பதில் கமல் எவ்வளவு உக்கிரமாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தான், தான் நடிக்கும் படங்களில், பாத்ரூமில் உச்சா போகும் காட்சிகளையும், கதாநாயகியின் நாக்கைச் சுவைக்கும் காட்சியையும் தவறாமல் வைத்துவிடுவார். ஹாலிவுட் படங்களை வேறு எப்படி தான் அவரால் அசிங்கப்படுத்த முடியும்?இப்போது, "சர்வதேச லெவலையும்' தாண்டி, அடுத்த லெவலுக்கு கொண்டு போக எண்ணி, இந்தக் கவிதையைப் படைத்துள்ளார். காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் கமல்.

 "எய்ட்ஸ்' பிரசாரத்துக்கு இவரை விட சிறந்த ஆள், வேறெங்கு கிடைப்பார்?தன் காம வேட்கையைக் காட்டிக்கொண்ட மாதிரியும் ஆயிற்று; இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திய மாதிரியும் ஆயிற்று என, ஒரே கவிதையில் இரண்டு இலக்குகளை எட்டியுள்ளார் கமல்.இந்தக் கவிதையைப் படித்ததும் எண்ணற்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. கொஞ்சம் கோபமும் எட்டிப் பார்க்கிறது. நாகரீகமற்றவர்கள் முன் நாமும் நாகரீகமில்லாமல் செயல்படுவது நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்கிறேன்.
விகடகவி - பாண்டி,இந்தியா
2010-12-07 11:54:39 IST
திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு, தாங்கள் ஒரு முக்கிய துறையில், முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்று நினைத்தால், கருத்து எழுதும் முன், இந்த கருத்தால் என்ன விளைவுகள் எழும் என்பதை தெரிந்து வைத்திருப்பவராக இருக்க வேண்டும். கோவை என்கவுண்டர் கட்டுரையும் மிகவும் தவறான சமயத்தில் வெளியிட்டு விமர்சனத்தை வாங்கி கட்டிக்கொண்டீர். இதிலும் தாங்கள் இந்து மதத்தின் காவலர் போல சித்தரித்து எழுதி மக்களை முட்டாலாக்குகிறீர். கமல் அவரது சொந்த துறையில் ஜாம்பவான் என்பதையும் ,தன் உடம்பை தானமாக கொடுத்துவிட்டது, அவரால் சினிமா துறையில் எதனை குடும்பங்கள் இன்று வாழ்ந்து கொண்டிருப்பது,ஆஸ்கார் விருதின் கதவை பலமுறை தட்டியுள்ளது, மேலும் அவர் உயர் வகுப்பை சேர்ந்த தமிழ் ஹிந்து. இவை அணைத்தையும் நீங்கள் ஏற்காவிட்டாலும், கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. பி.ஜே.பி.யின் முக்தார் அப்பாஸ் நக்வியை, முஸ்லிகள் இவர் முஸ்லிம் இல்லை என்று சொன்னால் பி.ஜே.பி.யினர், கட்சிக்காரர் என்பதால் முஸ்லிம் என்பார்கள். அதேபோல நீங்கள் கமலை ஹிந்து இன துரோகி என்று சொன்னாலும் அது உண்மை ஆகிவிடாது. இங்கு கருத்து சொன்னவர்களில் அநேகம் பேர் சம்ஸ்கிருத எழுத்தை பார்த்துக்கூட இருக்க மாட்டார்கள், உங்கள் எழுத்தால் கோபப்படும் அனைவரையும் விட மந்திரம், சாஸ்திரம், கற்றவர் கமல் என்பதையும் தாங்கள் மறந்துவிட்டு கருத்து எழுதாதீர்கள். இந்த கருத்து கமலுக்காக அல்ல. உலகை திரும்பி பார்க்க வைக்கும் பரமக்குடி தமிழனுக்கு, இந்தியனுக்கு. வாழ்க இந்தியா***...
செந்தில் குரோம்பேட் - க்ரோம்பேட்சென்னை,இந்தியா
2010-12-07 11:50:49 IST
ஐயா, சும்மா கமல திட்டாதிங்க. ஏன்? கும்பகோணம் கோயில் கோபுரத்துல இல்லாத சிலைகளா? குழந்தைகள் வரும் கோயில்களில் ஏன் பாலுறவை அப்பட்டமாக கட்டும் சிலைகள்? இந்து மதம் சிற்றின்பங்களுக்கு அப்பாற்பட்டது. இந்த மாதிரி பாட்டு எழுதினால் உடனே என் இந்து மதம் என்ன கலந்கப்படுவிடுமா? இந்து மதம் கடல் மாதிரி....அதில் இதுவும் ஒரு சிறு நதி. அவ்வளவுதான். ஏன், எல்லா பிரச்சனைகளிலும் உடனே கிறிஸ்து மதம் அல்லது முஸ்லீம் மதம் என்று ஆரம்பித்து விடுகிறீர்கள்? எல்லா மதத்திலும் இது போதிக்கப்படுள்ளதுதான். இதைவிட கலைஞர் ராமரை திருடன் என்று கூறினாரே! அப்போது எங்கே சென்றீர்கள்? யாரவது அவருக்கு நோட்டீஸ் விட்டீர்களா? கலைஞானி வாழ்க!...
kandavan - dubai,இந்தியா
2010-12-07 11:48:22 IST
intha kavithai... sorry.. kachada varigal - sensor board ilirundhu eppadi thappiththana? mattamana rasanai - vettkakedu!!!...
babug - chennai,இந்தியா
2010-12-07 11:48:20 IST
நான் நல்லவன் என்று சொல்லிக்கொண்டு மற்றவர்களை குறை சொல்ல எவனுக்கும் தகுதி இல்லை ....
ஸ்நெக் பாபு - சென்னை,இந்தியா
2010-12-07 11:47:16 IST
யோவ் உங்களுக்கெலாம் வேற வேலையே இல்லையா.. நம்ம நாட்ல எவ்ளோ பிரச்சன இருக்கு .. அதெல்லாம் பேசாம ஓர் மொக்க மேட்டர போய் பேசிட்டு இருக்கீங்க.. போ போய் புள்ள குட்டிய படிக்க வக்கிர வழிய பாரு......
Jeyakumar - Kuwait,குவைத்
2010-12-07 11:41:01 IST
We should not forget, that we tamilians encourage such super stars. It is high time tamils support only good in the movies so that these kind of so called super intelligents (he thinks himself so) are driven out of tamil film industry....
கமல் - Alwarpet,இந்தியா
2010-12-07 11:40:58 IST
மனதில் வக்கிர புத்தி கொண்டு வெளியில் நல்லவராய் வேஷமிடும் அனைவருக்கும் இந்த பாடல் வரிகள் தப்பாய் தான் தோன்றும்....
சுந்தர மூர்த்தி - புனே,இந்தியா
2010-12-07 11:40:02 IST
கமலுக்கு எதிராக இத்தனை விமர்சனங்களை பார்க்கும்போது எனக்கு ஒன்று மட்டும் விளங்கவே இல்லை...அனைவரும் கமல் இந்து மதத்தை இழிவு படுத்திவிட்டார் என்று புலம்புகின்றனரே... இவர்களில் யார் இந்து மதத்தை பற்றி தெளிந்தவர்கள்...??????? காமமும், இந்து மதமும் இரண்டற கலந்த ஒன்று... நம் புனித சின்னங்களின் அர்த்தம் அனைவரும் அறிந்ததே... காமத்தை அவர் கலை கண்ணோடு பார்க்கிறார்...நீங்க காமத்தை காம கண்ணோடு பார்ப்பதால் அது தவறாக தெரிகிறது... கலையை பிடித்தல் ரசியுங்கள்.... இல்லையேல் மற்றவர்களையாவது ரசிக்க விடுங்கள்... இந்து மதத்தை பற்றி தெரியாமல் வதந்திகளை பரப்பாதீர்கள்... மற்றொரு வேண்டுகோள். இந்து, முஸ்லிம் christian விளையாட்டுகளை நிறுத்துங்கள் முதலில்... kamal sir... dont bother about them... ethani periyar vanthalum ivungalai thirutha mudiyathu.......
BHARATHI - chennai,இந்தியா
2010-12-07 11:38:03 IST
இது கவிதை அல்ல, மஞ்சள் பத்திரிக்கையில் வர வேண்டிய கிறுக்கல்கள். கவிதை என்று சொல்லப்படும் ஒவ்வொரு வரியும் ஆபாசம் ....
அன்வர் பாஷா - உ.எ.இ,ஐக்கிய அரபு நாடுகள்
2010-12-07 11:36:35 IST
கமல் நீ தயவு செய்து இனி எந்த மதத்தயும் இழிவு படுத்த வேண்டாம்...
agniputhran - Pondicherry,இந்தியா
2010-12-07 11:36:13 IST
அடி செருப்பால ! கவிதை என்றாலே அதில் காமம் மறைமுகமாய் (கவனிக்க! மறைமுகமாய்) சொட்டும் என்பது இயற்கைதான் என்றாலும் இவ்வளவு பகிரங்கமாய் காமத்தை கவிதையில் காமசூத்ராவுக்கு இணையாக எச்ஹிதிய புதுமைக்கவிஞர் கமலுக்கு என்ன பட்டம் கொடுப்பது? ஊரை கெடுத்த உத்தமன் என்று பட்டம் கொடுக்கலாம். அது மட்டுமின்றி தேவை இல்லாமல் இந்து மத கடவுள்களை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்? அதில்தான் அவரது மார்க்கெட்டிங் ஐடியா இருக்கிறது. ஏனென்றால் தனது எந்த படமும் சரியாக ஓடவில்லை . ஏற்கனவே பித்து பிடித்த நிலையில் இருக்கும் அவருக்கு இந்த படத்தின் பட்டு மூலமும் அதனால் ஏற்படும் சர்ச்சை மூலமும் படத்திற்கு பப்ளிசிட்டி ஏற்படும். படத்ததை எப்படியாவது ஓட வைத்து விடலாம் என்று கனவு காண்கிறார். படம் நிச்சயம் ஓடும். ஆனால் தியட்டரில் அல்ல. தேயடரைவிட்டு ஓடும். இந்துக்கள் அனைவரும் இந்த படத்தை புறகணிக்க வேண்டுகிறேன்....
Thamizh - Chennai,இந்தியா
2010-12-07 11:35:44 IST
இவனுக்கு நாத்திகமும் தெரியாது. ஆன்மீகத்தையும் புரிந்துகொள்ளத் தெரியாது. ஆனால் தன்னை அறிவு ஜீவி என்று நினைத்துக்கொண்டு உலா வருபவன். மடையன். இந்த அசிங்கம் பிடித்த பூச்சியின் பின்னால் ஒரு முட்டாள் கூட்டம் வேறு....
Baskaran - Fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
2010-12-07 11:35:38 IST
வணக்கம் வாசகர்களே....... திரு.கமலஹாசன் குறித்த உங்களின் கருத்துகள் சிலவற்றை வாசித்தேன். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. இருந்தபொழுதிலும் ஒருவரது குடும்பத்தினையும் வம்புக்கு இழுப்பது என்பது அநாகரீகமான உச்சக்கட்டம். அரசியல் வாதிகள் கூறும்பெழுது இல்லாத ஆவேசம் கலைஞர்கள் கூறும்பொழுது வருவதேன். சிவாஜி ஒரு நல்ல கலைஞர். அவர் சொல்ல மறுத்த கருத்துக்களை இன்று இவர் கூறும்பொழுது உங்களின் ஆவேசம் புரியவில்லை. இன்று நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் குறிப்பாக ச்பெக்ட்ரம் ஊழல் தலை விரித்தாடுகிறது. அதற்க்கு ஒரு தீர்வு நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கநித் தாலே போதும். காலத்தின் மாற்றத்தில் கருத்து மாற்றங்கள் இயற்கை அதை எ ற்றுக்கொள்ள ஒரு தைரியம் வேண்டும். இல்லாவிடில் இன்றுள்ள சாட்டிலைட்டும் டிவி சானலும் இல்லை. ஆணுறையையும் குறை சொன்ன நம் முன்னோர்கள் தான். காலப்போக்கில் அதுவே தற்காப்பு விளம்பரம் ஆகிவிட்டது. காமம் என்பது சன்யாசி அல்லாத அனைவருக்கும் பொதுவானது. வள்ளுவன் சொன்னது வுலகமறையானது இவ் வாலிபன் (ஆத்திகன்) சொன்னது எதிர்மறையானதோ? சிந்தியுங்கள் (இருந்தால்) புலப்படும்....
எளியேன் - சென்னை,இந்தியா
2010-12-07 11:30:09 IST
வக்காலத்து வாங்குபவர்களே .. பண்டைய இலக்கியங்களில் கடவுள் மேல் அளவில்லா அன்பும் பக்தியும் கொண்டு உண்மையான பக்தியின் வெளிப்பாடாக கடவுளை கணவனாக நினைத்து வெளிப்படுத்திய கவிகளும் இதுவும் ஒன்றா? வேண்டும் என்றே செய்வதும் அன்போடு செய்வதும் ஒன்றா ? மிருகமாக இருந்தால் எல்லாம் ஒன்றுதான்.. ஒப்புக்கொள்ளலாம் . மேலும் எந்த நிலையிலும் பெண் தெய்வங்களை தாய் என்ற ஸ்தானத்தை விட்டு வேறு கருத்து பேச முடியாது .....
முருகதாஸ் - Vengaalore,இந்தியா
2010-12-07 11:29:31 IST
தனி மனித வாழ்க்கையில ஒருத்தன் சரியானவனா இல்லைன்னா, கண்டிப்பா அவன் பொது வாழ்க்கையிலும் சரியானவனா இருக்க முடியாது. சந்தி சிரிக்கிற வாழ்க்கை இந்தாளோட சொந்த வாழ்க்கை. என்னைக்கி நீ மேடையேற ஆரம்பிக்கிறியோ அன்னைக்கே உன்னோட தனி வாழ்க்கைய ஒழுக்கமுள்ளதா வச்சுக்கணும். இல்லன்னா மேடைஎறாதே. எல்லா அசிங்கத்தையும் பண்ணிட்டு, அது என்னோட சொந்த வாழ்க்கைன்னு சொல்லிடுற. உன்னப் பாத்து இந்த விசிலடிச்சான் குஞ்சுங்க எல்லாம், இப்பிடித்தான் வாழனும் போலருக்குன்னு நெனெச்சி கெட்டுபோவுதுங்க. உனக்கு உண்மையிலேயே சமுகத்து மேல அக்கறை இருந்தால், இப்பிடிப் பட்ட நாதாரித்தனத்த பண்ணாத. இல்லன்னா எல்லா நாதாரித்தனத்தையும் பண்ணு, ஆனா மேடையேறாத. ஒழுக்கம் கெட்டவன் மட்டும்தான் மேடையேரவோ, அரசியலதிகாரத்துல இருக்கவோ முடியும்கிறது எல்லாம் காலத்தோட கோலம்....
தமிழச்சி - madurai,இந்தியா
2010-12-07 11:25:09 IST
தயவு செய்து என் வீட்டு பாத்ரூமில் எட்டி பார்க்க வேண்டாம் என்று முந்தைய பேட்டியில் சொன்ன கமல் இப்போது அவர் வீட்டு பாத்ரூம் நிகழ்ச்சிகளை கவிதையாகவே வடித்து விட்டார் போலும். இவர் எழுதிய இந்த கொச்சை கவிதை மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது. இப்படத்தை யாராவது குடும்பத்துடன் சென்று பார்க்க தான் முடியுமா? சென்சார் துறைக்கு இந்தக் கவிதையை படத்திலிருந்து விளக்க வேண்டும் என்று தோன்றவில்லையா? இதைக் கேட்டால் சின்ன குழந்தைகள் கூட கேட்டுபோய் விடுவார்கள்....
அலெக்ஸ் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-12-07 11:17:47 IST
இந்த பாட்டு ரிலீஸ் ஆகி இவ்ளோ நாள் ஆச்சு ஆனா விஜய் டிவி ல தலைவர் பாடினதுக்கு அப்புறம் தான் உங்களுக்கு பாட்டு புரியுதா.... வேலைய பாருங்கப்பா...........
தத்துவன் - Angola,இந்தியா
2010-12-07 11:14:50 IST
உனக்கு புனிதமானது அவனுக்கு இல்லை.அவனுக்கு புனிதமானது உனக்கு இல்லை.அடுத்தவன் மீது உன் கருத்தை திணிக்காதே என்று கூறும் நீங்கள் கமல் எண்னத்தை ஏன் எதிர்கிறீர்கள்?அவன் வழி அவனுக்கு.அனைவரையும் பிழைக்க விடுங்கள்...
அபிகணேசன்.SINGAPORE - singapore,சிங்கப்பூர்
2010-12-07 11:14:23 IST
நல்ல கற்பனை காம கவிஞன் கமல்ஹாசன்....
prabakaran - karur,இந்தியா
2010-12-07 11:10:46 IST
script problem...
punniyam - saudi,இந்தியா
2010-12-07 11:08:42 IST
நல்ல மனிதர்களுக்கு இந்த பாடலை பற்றி விமர்சிக்க தோணாது...
ராஜேஷ்ராஜேஷ் - சென்னை,இந்தியா
2010-12-07 11:02:52 IST
ஏன்டா ...கூத்தாடி ....உனக்கு ஏன்டா இந்த பொழப்பு.............திருந்து அல்லது திருத்தபடுவாய் ........
அபு அசலம் - sharjah,யுனைடெட் கிங்டம்
2010-12-07 11:00:24 IST
padathukku nalla vilambaram kidaichiduchu...
ஆர் கே நடராஜ் - மதுரை,இந்தியா
2010-12-07 10:58:36 IST
நம்ம வாழ்க்கை சினிமா சார்ந்து இருக்கிறது. சினிமா அரசியல் சார்ந்து இருக்கிறது. நடிகர்கள் அத்தனை பேரும் மது, மாது, சூது என்று இருக்கிறார்கள். கட்டிய மனைவியே குழந்தைகளுடன் விட்டு விட்டு ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் நடிகையே பெண்டாட்டி ஆக்கிக் கொள்கிறார்கள். சமுதாய, மற்றும் கலாசார சீரழிவு செய்கிறார்கள். சினிமா சம்பந்தப்பட்ட அனைவரையும் மக்கள் ஒதுக்க வேண்டும்.நாடு கெட்டுக்கிட்டு இருக்கு. உசார்! சினிமா வருங்கால் சந்ததியர்களை கெடுத்துக்கொண்டு இருக்கிறது....
Tani - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-12-07 10:57:58 IST
கமல் நீங்கதான் சொன்னிங்க, நான் நாத்திகம் பேசுறது என் பெட் ரூம் எட்டி பார்க்குற மாதிரின்னு, நீ மட்டும் ஏன்டா ஹிந்துகளோட பெட் ரூம்ல எட்டி பார்க்குற,...
சு Thiyagarajan - Bangalore,இந்தியா
2010-12-07 10:54:55 IST
என்னப்பா கமல ஹாசா ! உன் மனதில் நீ என்ன மகா அறிவு ஜீவி என்றும் , பெரிய பகுத்தறிவு வாதி என்றும் நினைத்து இந்தக் கண்ணராவி பாட்டை கவிதை என்று கிறுக்கினாயா ?...
இந்தியன் - இந்தியா,இந்தியா
2010-12-07 10:50:50 IST
ஒரு காமுகனின் பிதற்றல். மனதின் அழுக்கு வெளியில் வருகிறது. இவன் எல்லாம் ஒரு மனிதன் ... சரியான காம வெறி பிடித்த ..... தூ. தூ.....
கோவை ராஜேந்திரன் C - Coimbatore,இந்தியா
2010-12-07 10:50:41 IST
கமல் ஒரு அயோக்கியன். நமக்கு கிடைத்த சில துரோகிகளில் இவனும் ஒருவன். நமக்கெல்லாம் எப்பொழுது ரோஷம் வரும் என்று தெரியவில்லை. கமல் ஒரு கிறிஸ்து மதத்தையோ அல்லது இஸ்லாமிய மதத்தையோ இது போன்று சொன்னால் வெட்டி போடுவார்கள். நாம் இவனுடைய படத்தை பார்க்க கூடாது. ரோஷமுள்ள இந்து இதை செய்ய வேண்டும்....
Desa Mainthan - India,இந்தியா
2010-12-07 10:49:18 IST
Enthiran padam mulam Rajinikanth pugzha petror. Kamal vaitrechal thangamal thanum ethavdhu saidhu pugzha peranum endru, komali dhanma saigirar, Depavli andru thathu pithu endru TV pateil ulariyadhu pol, tharpodhu ularalil uchaniku poi vittar. avruku ularal mannan endru pattam vazhalam....
mahi - சென்னை,இந்தியா
2010-12-07 10:48:32 IST
இவரை எல்லாம் உலக நாயகன் மற்றும் தலைசிறந்த நடிகன் என்றுல்லாம் சொல்லுகிறார்கள் ....... ஒரு குடும்பதையே ...நடத்த தகுதி இல்ல ...... இவரைஎல்லாம் உலக நாயகன்.... சினிமால இவரை புகழ்து பேசறாங்க .........
nanbenda - chennai,இந்தியா
2010-12-07 10:48:14 IST
கோவில் கோபுரங்களில் காமலீலைகள் சிலைகள் செதுக்கும் போது கமல் கவிதைகள் ஒன்றும் பெரிதல்ல குழந்தைகள் , பெண்கள் அப்ப மட்டும் கேட்டு போக மாட்டர்கள என்ன....
ரமேஷ் - சேலம்,இந்தியா
2010-12-07 10:47:48 IST
பிற மத கடவுளை பற்றி இவ்வாறு பாடி இருந்தால் மரணம் நிச்சயம். நீ இழிவு படுத்துவது ஹிந்து மத கடவுளை பற்றி அல்லவே. சொரணை கெட்ட காந்தியம் பேசும் நமது இந்தியாவில் நீ தப்பித்து கொள்வாய். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். வாழ்க இந்தியா....
கார்த்திக் - சென்னை,இந்தியா
2010-12-07 10:31:35 IST
என்னடா கலி யுகம் கிருஷ்ணா கிருஷ்ணா... கிருஷ்ணன் மட்டும் என்ன ஒழுங்கா? அவர் கூத்தடிக்கலையா? அவர்க்கும் எத்தினை பொண்டாட்டி தெரியுமா? சொல்ல வந்துட்டாங்க.......
vicky - kerala,இந்தியா
2010-12-07 10:31:12 IST
இந்து மக்கள் மன்னிக்கும் குணம் உடையவர்கள், ஆனால் ஒன்று மட்டும் கமல் சார் புரிஞ்சிகிடணும்/. எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு. சோ ப்ளீஸ் எங்களை சோதிச்சு பக்கதிங்க தங்க மாட்டீங்க ....
மு.கோபால் - karur,இந்தியா
2010-12-07 10:30:59 IST
அறிவிலிகளே அகநானுற்றை தூர எரிந்து விடலாமா???...
THANANJAYAN - thiruthuraipoondi,இந்தியா
2010-12-07 10:30:38 IST
கமல் ஒரு முட்டாள். அவன் எல்லாம்........
RAAM - america,இந்தியா
2010-12-07 10:27:56 IST
மதிப்புக்குரிய திரு கமல்ஹாசன் அவர்களுக்கு, உங்களது 'மன்மதன் அம்பு" என்கிற திரைப்படத்தின் இசை வெளியீடு விழாவில் தாங்களும் நடிகை த்ரிஷாவும் கலந்து வாசித்த கவிதையை கேட்டேன். கலைத்தாயின் தாகத்தை தணிக்கவந்ததாக சொல்லிக்கொள்ளும் உங்களை போல தமிழகத்தில் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் வேறு யாருமே இல்லை என்றே சொல்லவேண்டும். அழுத்தம் திருத்தமாக நீங்கள் எழுதி வாசித்த கவிதை சத்தியமாக நாராசமாக தான் இருந்தது. "கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால் களங்கம் உள்ளவள் எச்சரிக்கை உடனே கையுடன் கைகோர்த்தாளா ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை ஆடை களைகையில் கூடுதல் பேசினால் அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை கலவி முடிந்த பின் கிடந்து பேசினால் காதலாய் மாறலாம் எச்சரிக்கை உன்னுடன் இருப்பது சுகமென்றாளா உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை" என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்கள்? 50 வருட கலை உலக வாழ்வில் காற்றுக்கொண்டதையா? உங்களோடு இணைந்து நடித்த பெண்களால் வந்த அனுபவாமோ? அப்படி எனில் குடும்ப பெண்களோடு பழக வாய்ப்பு கிடைக்காத உங்களை பார்த்து தமிழ் சமுதாயம் வெட்கப்பட வேண்டி இருக்கிறது....! "அறுவடை கொள்முதல் என்றே காமம் அமைவது பொதுவே நலமாகக் கொள் கூட்டல் ஒன்றே குறியென்றான பின் கழிப்பது காமம் மட்டும் எனக்கொள் உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர் யோசிக்காமல் வருவதை எதிர்கொள் முன்னும் பின்னும் ஆட்டும் சகடை ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள் காமமெனப்படும் பண்டைச் செயலில் காதல் கலவாது காத்துக்கொள்" யாருக்கு இந்த ஆலோசனை ஐயா...உமது ரசிகர்களுக்கா? அவர்கள் ஒன்றும் உங்களிடம் காமப்பிச்சை கேட்டு வரவில்லையே? இல்லையெனில் உங்களது உற்றார் உறவினர்களுக்கா? அப்படியெனில் அதை வீட்டில் அல்லவா வாசித்திருக்க வேண்டும்..இப்படி வீதியில் கூடாதே? கலையை விலைபேசி காலம் கடந்து போய்விட்டதென்று, இப்பொழுது காமத்தை விலை பேசுகிறீர்களோ? எந்த 'கூட்டல் உமது குறி' என்று எங்களுக்கு தெரிந்தாலும் 50 வயது கதாநாயகநிடத்தில் நாங்கள் யாரும் இதனை ஏதிர்பார்க்கவில்லை "கலவி செய்கையில் காதில் பேசி கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும் வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும் குழந்தை வாயை முகர்ந்தது போலக் கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்" மேலே நீர் விடுத்த எச்சரிக்கை கண்டு உம்மோடு கூடி குலாவிய பெண்மையின் தன்மை காண...'வெள்ளை பற்களும் நாற்றம் இல்லாத வாயும்' எதற்கு? "காமக் கழிவுகள் கழுவும் வேளையில் கூட நின்று உதவிட வேண்டும்" இதை படிக்கும் போது உங்களை வக்கிரத்தின் மொத்த உருவகமாகவே காண தோன்றுகிறது. நாகரீகமற்ற உங்களை நானும் நாகரீகமில்லாமல் வசை பாடுவது நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. "இப்படிக் கணவன் வரவேண்டும் என ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன் வரந்தருவாள் என் வரலட்சுமியென கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு" எல்லாம் தெரிந்த நாத்திகவாதி என தன்னை முன் நிறுத்திக்கொள்ளும் நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? தைரியமாக சொல்லவேண்டியது தானே 'பேசண்ட் நகர் பீச் அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்கு' என்று? இப்பொழுது எது தடுப்பது? பிறப்பால் பார்ப்பனனாய் போனதால் ஏற்பட்ட பச்சாதாபமோ? "வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி? நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது? உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி? பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ? அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?" இத்தனை கேள்விகள் கேட்க உங்களுக்கு வரலட்சுமி மட்டும் தான் கிடைத்தாளா? சற்றே தாண்டி மயிலை மசூதியை தொட்டுப்பாருங்கள்..! கொஞ்சம் முன்னால் போய் சிலுவையை சீண்டிப்பாருங்கள்...! முடிந்தால் உமது நாத்திகத்தின் எல்லையை விரித்துப்பாருங்கள்...! மேலே 'கூட நின்ற உதவியோடு' கழுவ நினைத்தவை எல்லாம் காணாமல் போகும்...பாவம்...! உமது உலகளாவிய பகுத்தறிவு இந்துக்கடவுளை மட்டுமே இழிவுபடுத்த சொல்லிகொடுத்தது போலும்....! என்ன செய்வது? இந்து மகா சமுத்திரமாய் இருந்தாலும் ஊமைக்கூட்டமாய் போனதால் உம்மைப்போன்ற கருப்புக்கோமாளிகள் கலையின் பெயரால் குறுக்கே கும்மியடிப்பதை தடுக்க முடிவதில்லை...! தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன் முற்றும் துறந்து மங்கையரோடு அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்" நீங்கள் இதை கேலி செய்வதே பெரிய கேலிக்கூத்து. முற்றும் துறந்த அந்த மங்கையர் எல்லாம் உமது சுற்றத்தார் என்பதை சற்றே சுற்றிப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நல்ல வேளை..நீர் அம்மணத் துறவியாய் ஆடும் முன்பே உமது மருதநாயகம் முடங்கிப்போனது...! 'எனது கழிவறையை எட்டிப்பபர்க்காதீர்கள்' என்று சொல்லும் உங்களுக்கு அடுத்தவர் பூஜை அறையை எட்டிப்பார்கக என்ன தகுதி இருக்கிறது? "மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட அக்காளில்லா வேளையில் அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்" இதை நீங்கள் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே எழுதினீர்கள் அப்படித்தானே? பிறந்த இரண்டு மகள்கள் இருந்தும் இன்னொன்று கூட சேர்ந்த கதை ஊரறியுமே..! இந்த கவிதையை இவர் வாசித்துக்காடினாராம்...அதுகேட்டு கவிஞர் வாலி இவரை வாயார புகழ்ந்தாராம்...! வியாபார சந்தையில் வார்த்தைகள் விற்கும் வாலிக்கு நெற்றியில் விபூதி எதற்கு? இனி அவர் பாழும் நெற்றியோடு வாழட்டும்..! "உனக்கேனுமது அமையப் பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன் ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!" உங்களை பொருத்தவரை வரலட்சுமி என்பவள் எங்கும் இல்லையே..! எனவே வரவே வராத...வரவே முடியாத...இல்லவேயில்லாத வரலட்சுமியை விட்டுவிட்டு, பிரபந்தம் சொன்ன சேட்டையெல்லாம் கடல் தாண்டி கை கழுவிய கணவன் செய்தானா என்று உங்கள் வீட்டில் இல்லாளாக இல்லாமல் இருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்வது தான் உங்களுக்கும் ஊருக்கும்..மன்னிக்கவும்..(நீர் தான் உலக நாயகானாயிற்றே)..உலகுக்கும் நல்லது...! நன்றி. RAAM...
தமிழன் - trichy,இந்தியா
2010-12-07 10:23:31 IST
கமல் அவன் குடும்பத்தில் உள்ளதை பாடலாக பாடி உள்ளார். இதில் தவறு ஒன்றும் இல்லை...
த.எ.நாகராஜன் - குவைத்,இந்தியா
2010-12-07 10:10:59 IST
தயவு செய்து யாரும் கமலை திட்டாதீர்கள். ஏனென்றால் முன் ஒரு பாட்டிலே சொன்னதை சிறிது மாற்றி கொள்ளுங்கள். "கடவுள் பாதி மனிதன் பாதி" கு பதில் மனிதன் (கொஞ்சம்) மிருகம் (மிச்சம்) கலந்து செய்த கலவை கமல். உள்ளேயும் மிருகம் வெளியும் மிருகம் பார்வைக்கு மட்டும் மனிதன் கமல்...
சிவ சரவணன் - chennai,இந்தியா
2010-12-07 10:07:31 IST
அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாதே ........ ஏன் இந்த மாதிரி கவிதை எழுதுகிறாய்..... எல்லா மனிதர்களும் அறிவு இருகிறது. நீ அறிவாளி என்றால் இலங்கை தமிழர்களை பற்றி கவிதை எழுது. அவர்கள் படும் இன்னல்கள் பற்றி எழுது. அவர்களை கொடுரமாய் கொன்றானே ராஜ பகசை அவனை பற்றி எழுது.......
பிரவீன் - சென்னை,இந்தியா
2010-12-07 10:07:27 IST
இந்து தர்மத்தில் காமம் என்பது தெய்விக வார்த்தை. அதை கமல் போன்ற கூத்தாடிகள் கொச்சை படுத்தி இந்து கடவுள்களுடன் ஒப்பிட்டு பேசுவது ஹிந்துக்கள் அனைவரும் கே... .....என்று இவர் மட்டும் அல்ல இன்றைய முதல்வரும் இதை அடிக்கடி செய்கிறார். .. அல்லா , இயேசு போன்றவர்களை பேசி இருந்தால் ...................... ஹிந்துக்கள் எல்லாம் கேனையன் முடிவு பண்ணிவிட்டார்கள். இன்னைக்கு இருக்கிற மீடியாவும் , கஜோரோ சிற்பமும் ஒண்ணா.மெலிதான வெளிச்சம் காமத்திற்கு அழகு!!. அதை 10000 watts வெளிச்சத்தில் இல்லை. கமலுடைய ஜால்ராக்கள் வேண்டுமானால் ஆஹா.. ஓஹா.. என்று சொல்லலாம். ஹிந்துகள் என்றாவது ஒரு நாள் விழித்து கொள்ளவார்கள். உன்னை போன்றோரூர் அந்த " சம்பல் மேட்டில் " அமரும் காலம் வெகு தொலைவில் இல்லை....
தமிழ்த்தாய் புதல்வன் - நிலக்கோட்டை,இந்தியா
2010-12-07 10:07:15 IST
அட பண்ணாடைகளா.... இந்து கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் மேடையில் குத்தாட்டமும், ஆபாச நடனமும் அரங்கேறுமே அதுவும் சாமி கருவறைக்கு முன்பாக அதை என்னவென்று சொல்வீர்கள்???அதே கருவறையில் சந்நிதிக்கு முன்பாக காஞ்சிபுரத்தில் உடலுறவு கொண்டானே உங்க கோவில் பூசாரி அவனை என்ன பண்ணியது உங்க கடவுள் பக்தி????கடவுள் பெயரை சொல்லி போதைக்கு அடிமையாக்கி வைத்தானே உங்க கல்கி பகவான் அவனை என்ன பண்ணியது உங்க கடவுள் பக்தி????பணிவிடை என்ற பெயரில் காவி உடையுடன் சல்லாபத்தில் ஈடுபட்டானே நித்தி அவனை என்ன பண்ணியது உங்க கடவுள் பக்தி???? அது போல இப்பவும்.... இன்னும் ரெண்டு நாள் மட்டும் சும்மா சவுண்டு விடுவீங்க..... இதாண்டா உங்க கடவுள் பக்தி .....உங்களுக்கு இந்த கவிதையை பற்றி குறை கூற என்ன தகுதி இருக்கு???? வரிகளில் காமம் கலந்தால் தப்பா?????சரி நீங்க சொன்னது சரியாவே இருக்கட்டும் ......அப்போ மேலே சொன்ன சாமியார்கள் பண்ணினே அசிங்கதிலே காமம் இல்லையா????? நீங்க எல்லோரும் பக்தியா இருங்க வேண்டாம்னு சொல்லலே ........ஆனா அந்த பக்தியில் கொஞ்சம் பக்குவப்பட்ட அறிவும் இருக்கட்டும்..... எத்தனை பெரியார் வந்தாலும் நீங்களும் திருந்த மாட்டீங்க...இந்த நாடும் திருந்தாது????போங்கடா நீங்களும் உங்க கடவுள் பக்தியும்........
SILVERSTAR - CHENNAI,இந்தியா
2010-12-07 10:05:53 IST
வணக்கம் . இங்கே கருத்துகலை பதிவு செய்த அனைவருக்கும் மற்றும் திரு ரங்கராஜ் அவர்களுக்கும், ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம். அப்படி என்ன யாரும் சொல்லாததை யாரும் செய்யத்ததை கமல் சொல்லிவிட்டார். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் காமம் பிழிந்து வழிந்து கிடக்கிறது யாருக்கும் தெரியாமல். கடவுள் எப்படி பொதுவோ அதே போல் காமமும் பொதுவே. இங்கே உண்மையான பதிவிரதன் ராமன் போன்ற ஆண்மகன் இருந்தால் சொல்லுங்களேன். ஒரு பெண் தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டி அவளுக்கு பிடித்த கடவுளை பிரார்த்திக்கிறாள். தன மனதில் எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் திறந்த மனதுடன் வேண்டுகிறாள். அது தானே கடவுள் வழிபாடும்கூட. இதில் உங்களுக்கென்ன குறை. இதில் வரலக்ஷ்மி தாயையோ ரங்கநாதரையோ குறை சொல்லவில்லையே. இப்படி எதர்கேடுத்தலும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டே இருங்கள். உலகம் உருப்படும். அந்த ரங்கா நாதர் தான் உங்கள் அனைவரையும் காப்பாற்றவேண்டும். நீங்கள் நல்லவராக இருக்கலாம். உங்களை சுற்றயுள்ள அனைத்து ஆடவரும் உத்தமரே என்றும் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவர்கள் என்றும் உங்களால் உறுதியாக சொல்ல முடயுமா. வாய்ப்பு கிடைத்தால் பிறந்த இடம் தேடி அலையும் சாதாரண மனித பிறவி தானே அனைவரும். ஒரு நல்ல நேர்மையான பிறன் மனை நோக்க கணவன் வேண்டும் என ஒரு பெண் கடவுளை வேண்டுதல். உன் கணவனும் அப்படித்தானா என்று கேட்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லையே. உங்களுக்கு வேறென்ன குறை. கழுவுவதிலா ? ஏன் நாம் அனைவரும் காமம் முடித்து கழுவுகிரோமே. அதை பொது இடத்தில் சொல்ல கூடாது என்கிறீர்களா? இப்படி யோசிங்களேன். நான் கடவுளிடம் வேண்டும்போது சகல விஷயங்களையும் பேசி வேண்டுவேன் அது போல் தானே இதுவும் எனவே இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை நண்பர்களே....
முகம்மது கஜேந்த்திரன் எல்விஸ் - உன்கூபாறுமலேதிவு,மாலத்தீவு
2010-12-07 10:03:41 IST
இப்படிக் கணவன் வரவேண்டும் என ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன் வரந்தருவாள் என் வரலட்சுமியென கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு .... 100 சதவிதம் உண்மையான வரிகள் உண்மையை சொன்னால் கோபம் வரதான் செய்யும் ..........
muthu - அட்லாண்டusa,யூ.எஸ்.ஏ
2010-12-07 10:01:35 IST
தேங்க்ஸ் கமல் சார்...
madhuranthakathan - gelang,சிங்கப்பூர்
2010-12-07 10:00:51 IST
இந்த இந்து முன்னணிக்கு சினிமா பின்னாடி போவதை தவிர வேறு வேலை இல்லையா? நாட்டில் என்ன நடக்குது என்று parthu அதற்கு சரியான நடவடிக்கை இல்லை. இந்தியாவின் ஏதோ மூலயில் என்று நடத்தை ஆயுதமாக எடுத்து ஆர்ப்பாட்டம், கடை அடைப்பு நடத்துகிறார்கள் அதற்கு இந்த இந்து முன்னணி என்ன செயய போகிறது?...
அருணாசலம்.A - ALAPAKKAMCHENNAI,இந்தியா
2010-12-07 10:00:34 IST
sakthivel - singapore,நண்பர்க்கு,ஏன் நீங்கள் கஜுரஹோ வை இடிக்க கூடாது? எல்லா கடவுள் சிலைகளும் கவர்ச்சியாக தான் உள்ளது.. ஏன் அதை எதிர்த்து போராட கூடாது ? காப்பியங்களிலே காதல் காமம் உள்ளது அதையும் அழித்து விடலாமா ? விளங்காமல் இருந்தால் தப்பில்லை... விளங்க கூறினால் தப்பா ? வீண் விளம்பரம் செய்து கொடுக்காதீர்கள்.....என்று கேட்டு உள்ளீர்கள். காமம் என்பது மெல்லியது.மறைவாக செய்ய வேண்டியது என்று சில நியதிகள் உள்ளது.மனிதம் என்பது புனிதமானது.சற்று சிந்தியுங்கள் .plz...
வாசகன்.. - Bangalore,இந்தியா
2010-12-07 09:50:13 IST
கமல் ஐ பற்றி கருத்து சொல்ல வேண்டும் என்றால் உடனே வந்து விடுவீரே..... ஆர்.ரங்கராஜ் பாண்டே..... இது உங்களுக்கு.... நாகரீகமற்றவர்கள் முன் நாமும் நாகரீகமில்லாமல் செயல்படுவது நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்கிறேன்.........
Surya - Salem,இந்தியா
2010-12-07 09:47:50 IST
I think there is nothing wrong in this because in ramayana, mahabharatha also there are many situations like this கவிதை. பெண்ணின் அழுக்கில் இருந்து ஒரு கடவுளை உருவாகுவது etc etc so be cool guys.. U all knw that ramayana, mahabharatha are just stories written by a good director, y should we humans workship the characters in it......
முஹம்மது - இந்தியா,இந்தியா
2010-12-07 09:47:20 IST
இதே கவிதையைத்தான் கவிஞர் வாலி மிகவும் பாராட்டி எழுதியிருந்தார். இத்தனைக்கும் அவர் ஒரு வைணவர். அவருக்கே இதன் தவறு புரியவில்லையோ அல்லது காசு படுத்தும் பாடோ தெரியவில்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக