செவ்வாய், 7 டிசம்பர், 2010

வடமாகாண மக்கள் பலமான சக்தியாக இருப்பதற்கு காரணமாக யாழ் நூலகம்: கிழக்கு முதலமைச்சர்

வடக்கு மாகாண மக்கள் இன்று ஒரு பலமான சக்தியாகவும் அறிவுசார்ந்தும் இருப்பதற்கு முக்கிய காலாக இருந்தது யாழ் நூலகமாகும். அதன் எரிப்பு இனப்போராட்டங்களுக்கெல்லாம் வித்திட்டது. அறிவுப் பொக்கிசங்களில் கைவைத்ததுதான் பேராட்டங்களுக்குக் காலாக அமைந்தது என கிழக்கு மகாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் பொது நூலகத்துக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர்,  ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் வாசிப்பு என்பது மிக மிக முக்கியமானது. ஒரு சமூகத்தின் கடந்த கால வரலாறுகள் அடையாளங்கள், அந்த சமூகம் எங்கே செல்லப் போகின்றது என்கின்ற ஆவணங்களைப் பாதுகாக்கின்ற ஒரு இடம் தான் வாசிகசாலை.
எமது மக்களை எங்கு கொண்டு செல்ல வேண்டும். எமது மட்டக்களப்பு மாவட்டத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்கான திட்டங்களை எப்படி வடிவமைக்க வேண்டும் என்கிற திட்டங்களையெல்லாம் இங்கிருக்கின்ற அரசியல்வாதிகள் அதிகாரிகளாகிய நாங்கள் எல்லோரும் சேர்ந்து தான் திட்டமிடுகிறோம். திட்டமிட்டு அமுலாக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.
மாகாண முறைமைக்குள் வந்த பின்னர் அதற்கான அதிகாரங்களைக் கேட்டு நிற்கிறோம். அத்துடன் அதற்குள் எங்களுடைய மக்களுடைய தேவைகளை நிறைவேற்றவேண்டிய தேவையும் இருக்கிறது. அந்த வகையில்தான் இந்த வாசிகசாலையும் முக்கியம் பெறுகிறது.
வடக்கு, கிழக்கு பிரிந்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு யாழ் தலைமைகளோடு கோபங்கள் இருந்தாலும் அவர்களுடைய நல்ல விசயங்களை ஒதுக்கிவிட முயாது. உண்மையிலேயே அவர்களுடைய சமூகப்பற்றும் சமூகம் பற்றி அழமாகச் சிநத்தித்திருப்பதும் தான் யாழ் நூலகத்தின் வடிவமைப்புக்கும் அமைதலுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக